பிரசாரத்தை முதலில் துவக்கிய நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்

அருப்புக்கோட்டை : நாம் தமிழர் கட்சியின் அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் உமா 28, பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அருப்புக்கோட்டை அருகே தொட்டியான்குளத்தை சேர்ந்த விவசாயி அடைக்கலம் மனைவி உமா. பி.ஏ., பட்டதாரி.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தொகுதியில் உள்ள ஒவ்வொரு கல்லுாரிகளுக்கு சென்று காலை, மாலையில் மாணவர்களை சந்தித்து இலவச குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி தனக்கு ஓட்டளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார்.

புதிய வாக்காளர்கள், இளைஞர்களை குறிவைத்து உமா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அருப்புக்கோட்டை தொகுதியில் முதலில் பிரசாரம் துவக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment