புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

சிவகாசி : சட்டசபை தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமிருந்து வரும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் அமைதியாக நடத்துவது தொடர்பாக சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் அனைவரும் தீவிர கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கு, தேர்தல் கமிஷன் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் பாரபட்சம் காட்ட கூடாது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் , தாசில்தார் ராமசுப்பிரமணியன், டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment