வாக்காளர்களுக்கு முக கவசம், கையுறை

அருப்புக்கோட்டை : ”வாக்காளர்களுக்கு தேர்தல் நாள் அன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம், கையுறை வழங்கப்படும்,” என , அருப்புக்கோட்டை தொகுதி தேர்தல் அலுவலர் முருகேசன் கூறினார்.

அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நநை்த அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேர்தல் பிரசாரத்தில் தனிநபர் பற்றி விமர்சிக்க கூடாது.தனி நபர் இடங்களில் தட்டி வைக்க கூடாது. அனைத்து பணிகளும் முன் அனுமதி பெற வேண்டும். பணப்பட்டு வாடா, பரிசு பொருட்கள் வழங்குதல் தவிர்க்க வேண்டும்.பொது கூட்டம், ஊர்வலம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களுக்கு தேர்தல் நாள் அன்று முக கவசம், கையுறை வழங்கப்படும், என்றார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவீந்திரன் ஞானராஜ் முன்னிலை வகித்தார்.

Related posts

Leave a Comment