ஒருதலை பட்சமாக நடக்குது வாகன சோதனை

சிவகாசி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் நடைபெறும் வாகன சோதனை கண்துடைப்பாக , ஒருதலைபட்சமாக உள்ளது.

இதில் அப்பாவிகள் பாதிக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தேர்தல் தேதி அறிவித்த உடன் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது. மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்வதுதான். அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரன வியாபாரிகள், பொதுமக்கள்தான்.இவர்களும் தாங்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை எடுத்து செல்வதில்லை. சோதனை செய்யும் குழுவினரோ அரசியல்வாதிகள், அரசியல் பின்புலம் வாய்ந்த வி.ஐ.பி., வாகனங்களை சோதனை செய்வதில்லை.அவர்களை கண்துடைப்பாக பார்த்துவிட்டு அனுப்பி விடுகின்றனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்கின்ற சிறு வியாபாரிகளின் பணம்தான் சோதனையில் மாட்டி விடுகிறது.சமீபத்தில் சிவகாசியில் மதுரையை சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு நகை வாங்குவற்காக காரில் பணத்துடன் வந்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாதததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணத்திற்கு அவரால் எப்படி ஆவணங்களை கொண்டு வர முடியும் என தெரியவில்லை. அதே நேரத்தில் தேர்தலுக்கு பயன்படுத்த கூடிய பணத்தை கொண்டு செல்லும் அரசியல்வாதிகள் சோதனையில் தப்பிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் முகூர்த்த காலங்களில் தங்களது வீட்டில் விேஷசங்களை நடத்த கூட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஏனெனில் செலவிற்காக கொண்டு செல்லும் பணம் கூட அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. அதிகாரிகள் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் முறையாக அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். தெரிந்த வி.ஐ.பி., க்கள் என்றால் கண்டு கொள்ளாமல் விடுவதும், சாதாரன மக்களை சோதனை செய்வதும் தேர்தல் காலங்களில் வழக்கமாக உள்ளது. தேர்தல் ஆணையம் இதற்காக முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும்…………………நிலை மாற வேண்டும்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அனைத்து தேர்தல் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்து விட்டது.

ஆனால் இந்த விதிமுறைகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் உரிய காரணங்கள் இருந்தால் தெளிவாக விசாரிக்க வேண்டும். தேர்தல் வந்து விட்டாலே சிறு வியாபாரிகள், விேஷசங்கள் நடத்துபவர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் இதில் அரசியில் கட்சியினர் பிடிபடுவதில்லை.அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.முனீஸ்பாண்டி , வழக்கறிஞர், சிவகாசி…………

Related posts

Leave a Comment