ராஜபாளையத்தில் போலீசார் அணிவகுப்பு

ராஜபாளையம்: தேர்தலை முன்னிட்டு ராஜபாளையத்தில் 200 க்கு மேற்பட்ட போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.ராஜபாளையம் தொகுதியில் 418 ஓட்டுச்சாவடிகளில் 4 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டள்ளன். பொது மக்களிடையே அச்சத்தை போக்கும் விதமாக நடந்த அணிவகுப்புக்கு டி.எஸ்.பி., நாகஷங்கர் தலைமை வகித்தார்.ராஜபாளையம் மாரியம்மன் கோயில் திடல் எதிரிலிருந்து தொடங்கி மெயின் ரோடு வழியாக காந்தி கலை மன்றம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன், ரவுண்டானா பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முடிந்தது.

Related posts

Leave a Comment