ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில வேனில் கொண்டுவரபட்டு பிடிபட்ட ரூ.3.21 கோடி குறித்த விசாரணையில், வங்கிகளின் பணம் என்பது தெரியவர அதை விடுவிக்க வருமானவரித்துறை அனுமதியளித்துள்ளது.
மார்ச் 17ல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன கண்காணிப்பில் மதுரையிலிருந்து வந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் வைக்கும் குழு வேனில் உரிய ஆவணமின்றி ரூ.3.21 கோடி கொண்டு வரபட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.வருமானவரித்துறையினர் அன்றிரவே ஸ்ரீவி., வந்து விசாரித்தனர். ஸ்டேட் பாங்க், கனரா பேங்க் உயரதிகாரிகள் விளக்கமளித்ததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைக்க வருமானவரித்துறை அனுமதி அளித்துள்ளது.