அருப்புக்கோட்டை : இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிரந்தர திட்டத்தை செயல்படுத்துங்கள்”, என ம.நீ.ம.,தலைவர் கமல் பேசினார்.
அருப்புக்கோட்டையில் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது, ” ஓட்டிற்கு ஆயிரம், 2 ஆயிரம் கொடுக்காதீர்கள். மக்கள் பயன்படும் வகையில் 5 லட்சம் கொடுங்கள். 3 தலைமுறையாக தமிழகம் சீரழிந்து விட்டது. கமல் ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். ஏது பணம் என்று கேள்வி கேட்கின்றனர் அது என் சொந்த பணம். நீங்கள் மக்கள் வரி பணத்தில் வந்து செல்கிறீர்கள். நலத்திட்டம் என்ற பெயரில் பணத்தை கொடுத்து விட்டு, அதை டாஸ்மாக் மூலம் கறந்து விடுகிறீர்கள். இலவசங்களால் ஏழ்மையை ஒழிக்க முடியாது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற நிரந்தர திட்டங்களை செயல்படுத்துங்கள். மனித வளத்தை மேம்படுத்தினாலே போதுமானது. இந்த தாடி வேண்டுமா, அந்த தாடி (வெள்ளை தாடி) வேண்டுமா? நீங்கள் முடிவு செய்யுங்கள். தமிழகம் கடனில் மூழ்கியுள்ளது. அரசு பள்ளிகள் தடுமாறிக் கொண்டிருப்பதால், மாணவர்களுக்கு தமிழும் தடுமாறுகிறது .கமலுக்கு 300 கோடி நஷ்டம் என்கின்றனர். நான் கவலைபட வில்லை. சினிமாவை விட அரசியல் முக்கியம்,” என்றார்.–