சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பங்குனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதற்காக நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்திருந்தனர்.

காலை 6:30 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்களை மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம், ஓடைகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். மாலையில் கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related posts

Leave a Comment