ஆன்லைன் மாரத்தான் : ஜே.சி.ஐ., ஏற்பாடு

சிவகாசி : ஜே.சி.ஐ., சிவகாசி டச்சஸ் சார்பில் தொடர்ந்து 58 மணி நேரம் ஆன்லைன் மாரத்தான் என்ற முறையில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அக். 25 காலை 8:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக 58 மணி நேரம் நடந்து அக். 27 மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. இதற்கு தலைவர் ராஜகோமதி தலைமை வகித்தார். 29 பேச்சாளர்கள் வெவ்வேறு தலைப்புகளில் தலா இரண்டு மணி நேரம் பேசினர். இதயம் நிறுவனம் தலைவர் முத்து, அரிமா சங்க முன்னாள் ஆளுநர்கள் பிரகாஷ், சுதந்திரலட்சுமி, ஜே.சி.ஐ., முன்னாள் தேசிய தலைவர் ரவிசங்கர் பங்கேற்றனர். உலகின் முதன் முறையாக லைப்ஸ்கில்ஸ் தலைப்பில் நடந்த இதை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி , தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்தது.

Read More

பணியாளர்களுக்கு புத்தாடை

ராஜபாளையம் : கொரோனா காலத்தில் ராஜபாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் தனது 3மாத ஊதியமான ரூ. 3.15 லட்சத்தில் இருந்து 205 பேருக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கினார். தலைமை மருத்துவ அலுவலர் பாபுஜி, ஒன்றிய தலைவர் சிங்கராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்,ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ் பங்கேற்றனர்

Read More

ஆக்கிரமிப்பு ஊரணி மீட்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஆக்கிரமிப்பால் மாயமான ஊரணி சிவகாசி சப்கலெக்டரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டு மீண்டும் ஊரணியாக்கப்பட்டு வருகிறது. பிள்ளையார்குளத்தில் 2 ஏக்கரிலிருந்த ஊரணியில் மரக்கன்றுகள் வைத்து தனிநபரால் ஆக்கிரமிக்கபட்டு தோப்பாக மாற்றபட்டிருந்தது. சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் விசாரணை செய்து ஊரணி ஆக்கிரமிப்பு செய்யபட்டதை கண்டறிந்தார். இதை தொடர்ந்து ஊரணி மீட்கப்பட்டது. தற்போது மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஊரணியாக்கும் பணி நடந்து வருகிறது.

Read More

வத்திராயிருப்பில் 126 மி.மீ., மழை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவி., சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. மழையால் வத்திராயிருப்பில் 126.8 மி.மீட்டரும், பிளவக்கல் அணையில் 29 மி.மீ, கோவிலாறு அணையில் 32.4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், தாணிப்பாறை பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து, அணை மற்றும் கண்மாய்கள் நிரம்ப வேண்டுமென்பது அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். ஸ்ரீவில்லிபுத்துாரில் 44 மி.மீட்டர் மழை பெய்திருந்தநிலையில், கீழப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவில் கருப்பசாமி என்பவர் புதிதாக கட்டியிருந்த வீட்டின் தரைதளம் 3 அடிக்கு மண்ணுக்குள் இறங்கியது. இதையடுத்து சுற்றுப்பகுதியில் குடியிருப்போர் வேறு இடத்திற்கு மாற்றபட்டு, மின்சப்ளையும் துண்டிக்கபட்டது.

Read More

BiharElections | #RahulGandhi | #NarendraModi

எங்களுக்கு நாட்டை வழிநடத்த தெரியும், பொய் சொல்லத் தெரியாது – ராகுல் காந்தி உள்நாட்டு பிரச்னைகளை பிரதமர் மோடி பேசுவதில்லை – பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு#BiharElections | #NarendraModi | #RahulGandhi

Read More

#AIADMK | #EdappadiPalaniswami | #OPanneerselvam | #Jayakumar

சென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்வடசென்னை தெற்கு (கிழக்கு) – ஜெயக்குமார்வடசென்னை தெற்கு (மேற்கு) – நா.பாலகங்காதென் சென்னை வடக்கு (கிழக்கு) – ஆதிராஜாராம் தென் சென்னை வடக்கு (மேற்கு) – தி.நகர் சத்யாதென்சென்னை தெற்கு (கிழக்கு) – எம்.கே.அசோக்தென் சென்னை தெற்கு (மேற்கு) – விருகை V.N.ரவி

Read More

Thevar jayanthi

அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 113-வது ஜெயந்தி விழா முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சார்பாக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ஜெயபாண்டியன் நன் கொடை வழங்கினார். உடன் நதிக்குடி ஊர் நாட்டாமை பிச்சுமணி தேவர் அவர்கள், ஊர் தலைவர்,தி.மு.க கழக உடன் பிறப்புகள்

Read More