முதியவருக்கு அமைச்சர் உதவி

அருப்புக்கோட்டை – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று இரவு 7:30 மணிக்கு பாலவநத்தம் வழியாக சென்றார்.அங்கு விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் விழுந்து கிடந்த பாலவநத்தம் தெற்கு தெரு முனியாண்டிக்கு 65, ராஜேந்திரபாலாஜி முதலுதவி சிகிச்சை அளித்தார்.அவரை உறவினர்களுடன் காரில் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Read More

பராமரிப்பு இல்லா பூங்கா; புதர்கள் சூழ்ந்த மின் டவர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 லட்சம் ரூபாய் நிதியில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இதன் அருகில் மின் வாரிய உயர் அழுத்த டவர் உள்ளது. பூங்கா அமைக்கும் போதே உயர் மின் அழுத்த டவர் பகுதியில் பூங்கா அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். எதையும் காதில் வாங்காமல் நகராட்சியினர் பூங்கா அமைத்தனர்.இதுனால் கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது பூங்கா முட்புதர்கள், செடி கொடிகள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. அதன் அருகில் உள்ள மின் வாரிய டவரிலும் புதர்கள் சூழ்ந்து கொடி மேலே படர்ந்து செல்கிறது.இந்த பகுதி மக்கள்: நகராட்சி பூங்காவினாலும் பயன் இல்லை. அதில் அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய டவரும் பரமாரிப்பு இல்லாமல் உள்ளது. தற்போது உள்ள நிலையில்…

Read More

சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் செவ்வாய் பிரதோஷம் நடந்தது. மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. சாமி உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ரகு, ரமேஷ் பட்டர்கள் நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Read More

ரோட்டோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றலாமே!

அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரம் பாதசாரிகள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஒதுங்க முடியாமலும் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக நான்கு வழிச்சாலை, ராஜாபாளையம் – கொல்லம், ராஜபாளையம் – தென்காசி இடையே தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தவிர மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டுப்பட்ட ரோடுகள் பல உள்ளன. இவற்றில் ரோடு விரிவாக்கம் பணிக்காக அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. பராமரிப்பில்லாததால் ரோட்டோரங்களில் காடு போல் முட் செடிகள் வளர்ந்துள்ளன. பாதசாரிகள் ரோட்டோரம் நடந்து செல்லவும், டூவீலர்கள், வாகனங்கள் ஒதுங்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. சாலை பணியாளர்கள் ரோடுகளை பராமரித்து வந்தனர். தற்போது ரோடு பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் தொய்வு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணி அவசியம் ரோடுகள் முறையான பராமரிப்பு இன்றி முட் செடிகள் காடு போல் வளர்ந்து…

Read More

ரோட்டோரங்களில் இல்லை மரங்கள்; சிரமத்தில் பாதயாத்திரை பக்தர்கள்

அருப்புக்கோட்டை : ரோட்டோரங்களில் மரங்கள் இல்லாததால் திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மதுரை-துாத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலை துறையினரால் ரோட்டின் இருபுறமும் நின்ற நிழல்தரும் மரங்களை வெட்டி அகற்றினர். ஒரு மரத்திற்கு 10 மரம் வைத்து பராமரிக்கப்படும் என வெட்டப்பட்டது தான் மிச்சம். இன்றுவரை ஒரு மரங்களை நடவில்லை. பெயருக்கு ஆங்காங்கு மரக்கன்றுகளை வைத்து அவற்றை முறையாக பராமரிப்பு செய்யாததால் அவைகளும் கருகி மாயமாகி விட்டன. மதுரை, அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுபகுதி முருகன் பக்தர்கள் திருச்செந்துார் கோயிலுக்கு இந்த ரோட்டை பயன் படுத்தி தான் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அன்று ரோட்டின் இருபுறமும் நன்கு வளர்ந்துள்ள மரங்களால் கிடைக்கும் நிழலில் களைப்பு தெரியாமல் நடந்து சென்று வந்த நிலையில் மரங்கள் இன்றி பாதயாத்திரை…

Read More

கும்மிருட்டில் தெருக்கள்… மாதம் ஒரு முறை குடிநீர்; அவதியில் ஜெயநகர் மக்கள்

அருப்புக்கோட்டை : கும்மிருட்டில் தெருக்கள், மாதம் ஒரு முறை குடிநீர் என்பன போன்ற பிரச்னைகளுடன் அருப்புக்கோட்டை கஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஜெயநகர் மக்கள் தவிக்கின்றனர். 15க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ள இந்நகர் புறநகர் பகுதியாக இருப்பதால் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை. தெருக்களில் மின்விளக்கு இன்றி இருளாக இருப்பதால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.இருளை பயன்படுத்தி குடிமகன்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கும்மாளமிகின்றனர். சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. திருச்சுழி ரோட்டிலிருந்து ஜெயநகருக்கு செல்லும் ரோடு கிடங்காக உள்ளது. அரசு நிதி மூலம் கட்டப்பட்ட மண்புழு உர கூடம், கால்நடை தொட்டி பயனற்று கிடக்கிறது. ஊராட்சி மூலம் வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் வருகிறது. தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். ஊராட்சி மூலம் கழிப்பறை கட்டப்பட வேண்டும். மயானத்திற்கு செல்லும் ரோடும்…

Read More

முடங்கிய குற்றப்பிரிவு…தத்தளிக்கும்’ டிராபிக்’; நெரிசல், திருட்டால் அல்லல்படுது அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை : போலீசார் இல்லாது முடங்கிய குற்றப்பிரிவால் அதிகரிக்கும் திருட்டு, போக்குவரத்து பிரிவில் போதிய போலீசார் இன்றி நெரிசல் என தினமும் அவதியை சந்திக்கின்றனர் அருப்புக்கோட்டை நகர் மக்கள். அருப்புக்கோட்டையில் போலீஸ் குற்றப்பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நகரில் பகல் மற்றும இரவில் ரோந்து செல்ல, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டு பிடிப்பது என பல பணிகள் குற்ற பிரிவின் பணியாக உள்ளது. ஆனால் இப்பிரிவிற்கு போலீசாரே இல்லாத நிலையில் ஒரு இன்ஸ்பெக்டரே உள்ளார். இவரோ ,சட்டம், ஒழுங்கு பிரிவு போலீசாரை கொண்டே பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. 20க்கு மேற்பட்ட போலீசார் இருக்க வேண்டிய இப் பிரிவில் ஒரு போலீசார் கூட இல்லாது குற்ற பிரிவானது முடங்கி கிடக்கிறது. தற்போது நகரில் பெருகி வரும் தொடர் குற்றங்களுக்கு குற்ற பிரிவில் போலீசார் இல்லாததே காரணமாக…

Read More

நிலத்தடி நீர் சேகரிப்பில் புதுமை.. மத்திய அரசு நிதியில் அருப்புக்கோட்டையில் மும்முரம்

அருப்புக்கோட்டை : தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு மழை நீர் சேகரிப்பு, நீரை சிக்கனமாக செலவழிப்பது, பயன்படுத்திய நீரை சேகரிப்பது உட்பட பல கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் இதற்கான பணி மத்தியரசு நிதியில் ஆமணக்கு நத்தம் ஊராட்சியில் மும்முரமாக நடந்து வருகிறது. மத்திய அரசானது துாய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தேவையான நிதிகளை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் தண்ணீரை வீணாக்காமல் அதை நிலத்தில் விட்டு நிலத்தடி நீரை சேகரிக்கும் வகையில் கட்டமைப்புஉருவாக்கி உள்ளது. அதாவது வீடுகளில் நாம் பாத்திரம் மற்றும் மற்ற புழக்கங்களுக்கு தண்ணீரை செலவழிக்கும் போது பயன்படுத்த பட்ட தண்ணீர் வீணாக செல்கிறது. இதை முறைப்படுத்தி நிலத்தில் மீண்டும் விட்டு விட்டால் நிலத்தடி நீர் உயர…

Read More

புதுசும் வரல; நிறுத்தப்பட்டதும் வரல ; அவதியில் அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரயில்வே வழிதடத்தில் வந்த ஒரு ரயிலும் நிறுத்தப்பட்ட நிலையில்,ஆண்டுகள் கடந்தும் புதிய ரயில்களையும் இயக்காத நிலையில் இங்குள்ள ஸ்டேஷன் காட்சி பொருளாகவே உள்ளது. மானாமதுரை விருதுநகர் ரயில்வே பாதை அகலப்பாதையாக மாறியும் இவ்வழியில் ஒரு ரயிலை தவிர ஒன்றும் வருவதில்லை. சிலம்பு ரயில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னை செல்கிறது. விருதுநகர் – திருச்சி வரை சென்ற ரயில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை இயங்கவில்லை. அதை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.அருப்புக்கோட்டையிலிருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு தினசரி 200 க்கு மேற்பட்ட பயணிகள் ரயிலில் செல்வதுண்டு. ரயில் வசதி இல்லாததால் மதுரை ,விருதுநகர் சென்றும் செல்லும் நிலை தொடர்கிறது. சிலம்பு ரயிலை தினசரி இயக்க கோரிக்கை வைத்தும் இது நாள் வரை நடவடிக்கை…

Read More

குடிநீா் வசதி கேட்டு பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை 9 ஆவது வாா்டைச் சோ்ந்த பெண்கள் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கநாதசுவாமி கோவிலருகே உள்ள சாலையில் வெள்ளிக்கிழமை சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து, நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read More