2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அன்னாரது நினைவிடத்தில் சாத்தூர் S.V.சீனிவாசன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ..

Read More

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி

மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை சரிசெய்வேன் அவர் தெரிவித்துள்ளார். சென்னை: மதுரை மணிநகரத்தை சேர்ந்தவர் கே.முருகேசன். தனியார் நிறுவனத்தில் விற்பனையாளர். இவருடைய மனைவி ஆவுடைதேவி. இந்த தம்பதியின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டு, அகில இந்தியஅளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட பார்வை நரம்பு கோளாறு காரணமாக கண் பார்வையை இழந்தார். இருப்பினும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி என்ற ஒற்றை இலக்கை விரட்டிப்பிடித்து சாதித்துள்ளார். இதுபற்றி பூர்ணசுந்தரி கூறியதாவது:- பார்வை இழந்ததை பெரிய கவலையாக நான் கருதவில்லை. அதை எனக்கு தெரியாத வகையில் எனது பெற்றோர் நன்றாக பார்த்துக்கொண்டனர். 2016-ம்…

Read More

‘கொரோனா இறப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை’: விஜயபாஸ்கர்

சென்னை,; ”கொரோனா தொற்றுடன், நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் இறப்புகள் குறைவாகவே உள்ளன. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், இறப்புகளை குறைக்க முடியும்,” என, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை அழைத்து வர வசதியாக, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வழங்கினார்.பின், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கூடுதலாக, 1,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.1,000 படுக்கைகள்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே, 1,000 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுதலாக, 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில், இதுவரை, 15 ஆயிரம் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.உணவு சாப்பிட சிரமப்படும் நோயாளிகளுக்கு, கவச உடை அணிந்து, உணவை ஊட்டி விடும்…

Read More

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6501 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது. குறைவான பரிசோதனை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52955 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 27,86,250 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 2,68,285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மிக அதிக டிஸ்சார்ஜ் தமிழகத்தில் ஒரே நாளில் இன்று 6501 பேர் மருத்துவமனையில் இருந்து…

Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .. குஷ்பு ட்வீட்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து முன்கள பணியாளர்களான டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், செவிலியர் உள்ளிட்டோர் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் அண்மைக் காலமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் 18க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஐஏஏஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமித்…

Read More

ஒருபக்கம் லாக்டவுன்.. இன்னொருபக்கம் சரியும் கொரோனா கிராப்.. சரியான பாதையில் தமிழகம்.. குட்நியூஸ்!

சென்னை: தமிழகத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கேஸ்கள் குறைய தொடங்கி வருவது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதேபோல் இன்று சென்னையில் 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தமாக 98767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு பக்கம் தினமும் 5000 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வரும் நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்த தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சில தளர்வுகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இ – பாஸ் தொடங்கி பேருந்து போக்குவரத்து தடை வரை பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து…

Read More

ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் புதிய கல்வி கொள்கை- கனிமொழி

சென்னை: ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக் கனியாக்கும் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டமானது புதிய கல்வி கொள்கைக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதலையடுத்து புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளது. தற்போது நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடயே புதிய கல்வி கொள்கை குறித்து திமுக லோக்சபா எம்.பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக்…

Read More

உதவியாளருக்கு கொரோனா உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும். ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும்…

Read More

TN_Together_AgainstCorona#COVID2019#Lockdown6#edappadipalanisami

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!TNLockdown #வீட்டில்இரு#TN_Together_AgainstCorona#COVID2019#Lockdown6#edappadipalanisami

Read More