நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி நன்றி

சென்னை: திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தததற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகில் 45 ஆண்டுகளை நடிகர் ரஜினி நிறைவு செய்கிறார். இதற்காக திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி, டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

Read More

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சின்னி ஜெய்ந்த். ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், முரளி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் சின்னி ஜெயந்த். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி இந்நிலையில் தனது மகனால் பெருமையடைந்துள்ளார் சின்னி ஜெயந்த். அதாவது சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ரசிகர்கள் வாழ்த்து இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

Read More

அனில் முரளி திடீர் மரணம்

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி திடீர் மரணம்: மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி.உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது.தனி ஒருவன், கொடி, வால்டர் உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர். RIP Actor @Anil Murali etta …. He was 56. He has acted almost 200 films in Malayalam, Tamil and Telugu languages & including my current project

Read More

காலம் கடந்து பேசும் காதல் காவியம்.. கேளடி கண்மணிக்கு வயசு 30 ஆகுது!

சென்னை : இயக்குனர் வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான கேளடி கண்மணி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது . இளம் வயது காதலையும் நடுத்தர வயது காதலையும் ஒரே கதையில் புகுத்திய திரைக்களத்தை கொண்டு வெளியானது இந்த திரைப்படம். காலத்தால் அழியாத காவியமாக தமிழ் சினிமாவில் அழுத்தமான படைப்புகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களால் மிக உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு காலத்தால் அழியாத காவியமாக பல ஆண்டுகள் கடந்தும் திகழ்ந்து வருகிறது. இது போன்ற கதைகளை இயக்குவதில் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் திரைத்துறையில் இருந்த நிலையில் வசந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய கேளடி கண்மணி திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இரு வேறு காதலை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட…

Read More

பயம் வேண்டாம்.. ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனாவில் இருந்து மீண்டது இப்படித்தான்.. விஷால் விளக்கம்

சென்னை: கொரோனாவில் இருந்து தானும் தனது தந்தையும் மீண்டது எப்படி என்று நடிகர் விஷால் விளக்கி உள்ளார். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சென்னை: கொரோனாவில் இருந்து தானும் தனது தந்தையும் மீண்டது எப்படி என்று நடிகர் விஷால் விளக்கி உள்ளார். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அது உண்மைதான் அவர்கள் சிகிச்சை எடுத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இப்போது குணமடைந்து விட்டனர். இது பற்றிய செய்தி பரவியதை அடுத்து நடிகர் விஷால், உண்மைதான் என்று உறுதிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தாங்கள் குணமடைந்தது எப்படி என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது. முதலில் தந்தைக்கு இந்த…

Read More