ஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

புதுடில்லி: ஏப்., 14க்கு பின் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கியதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி இரவு டிவியில் பேசிய பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த உத்தரவு வரும் ஏப்., 14 வரை அமலில் இருக்கும். ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவு அதற்கு பிறகும் நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ துவங்கியது. ஆனால், இதனை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Read More

#இந்தியா கொரானேவை விரட்டும் என்ற நம்பிக்கை உள்ளது..

₹ சீனா 1000 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்ட 10 நாட்கள் ஆனது. ₹ இந்திய 6370 படுக்கை வசதியை ஏற்படுத்தி மருத்துவமனையாக மாற்றி ஒரு நாளில் முடித்து சாதனை. ₹ இத்தாலி 10 கோடி மக்களை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கிறது. ₹ ஆனால் இந்தியா 130 கோடி மக்களை கட்டுபடுத்தி சாதனை படைத்து உள்ளது. ₹ மற்ற நாடுகளை பார்க்கும் போது இந்திய கொரானோ வைரஸ்யை கட்டுக்குள் தான் வைத்து உள்ளது. ₹ கொரானோ வைரஸ்யை இந்திய இன்னும் சில நாட்களில் விரட்டி அடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ₹ இந்தியர்கள் அனைவரும் திறமை படைத்தவர்கள் சாதனை படைக்கும்.

Read More

Narendra Modi Prime Minister of India

கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை மீற வேண்டாம். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி சிரமப்படும் ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். பிரதமர் மோடி மேலும் உரையாற்றியதாவது ; கொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை, நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். ஊரடங்கு என்பது கொரோனா போரில் வெற்றி பெறவே. நாம் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு முடிவால் மக்கள் சிலர் என்மீது கோபம் அடையலாம். ஊரடங்கு ஒன்றே கொரோனாவை ஒழிக்க சிறந்த வழி. கடினமான முடிவே மக்களை காப்பாற்றும். நான் எடுத்திருக்கும் ஊரடங்கு…

Read More

Narendra Modi Prime Minister of India

டெல்லி: கொரோனாவை தடுக்க கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1024 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் நாட்டு மக்களிடம் சமூக தொற்றாக மாறுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மூலம் மட்டுமே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதால் மத்திய அரசு இந்த லாக் டவுன் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்றும் ரேடியோவில்…

Read More

மின்னல் வேக ஓட்ட இளைஞருக்கு பயிற்சி அளிக்க திட்டம் : கிரண் ரிஜிஜூ

உசேன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தும் விதமாக அவருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா போட்டி நடைபெற்றது. எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர், சகதியுடன் தடம் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்ற இளைஞர், பந்தய தூரத்தை வெறும் 13.62 நொடியில் கடந்தார். அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் சீனிவாச கவுடா கடந்துள்ளார். உலகில் மிக வேகமாக ஓடும் மனிதராகக் கருதப்படும் உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் 100 மீட்டர் ஓட்ட போட்டியைக் கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. அதனை முறியடிக்கும் விதமாக சீனிவாச…

Read More

பதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் இந்த குட்டி பையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் கடந்த 11-ஆம் தேதி வெளியானது. எக்சிட் போல் முடிவுகளை வைத்து ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்பதால் கடந்த 10-ஆம் தேதியே ஆம் ஆத்மியின் கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை தந்தனர். அவ்வாறு வருகை தந்ததில் ஒரு சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

Read More

விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக்காளை

நம் இந்திய இராணுவத்தில் பணியில் இருக்கும் போது புல்வாமா தாக்குதலில் இதே நாளில் உயிர்த்தியாகம் செய்த*K.சுப்பிரமணியன்* அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெண்மண்டலத்தின் தளபதி கடம்பூரின் இளைய ஜமீன்தார் எங்களின் ராஜா கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களால் சவலாப்பேரி கிராமத்தில் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டு அண்ணாரின் மனைவி மற்றும் அம்மா அப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் இந்நிகழ்வில் நமது விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *G.சாமிக்காளை கலந்து கொண்டார் *ஜெய்ஹிந்த்*

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி

ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இது குறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது.

Read More