ஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி – பிரதமர் மோடி

டெல்லி: ஆம்பன் (அம்பன், உம்பன்) புயலால் பெரும் சேதங்களை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கத்துக்கு ரூ1,000 கோடியும் ஒடிஷாவுக்கு ரூ500 கோடி நிதி உதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான சூப்பர் புயல் ஆம்பன் மே 20-ந் தேதியன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஒடிஷாவில் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் 15 லட்சம் மக்கள் முன்னேற்பாடாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டன. மேற்கு வங்கத்திலும் கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனாலும் ஆம்பன் புயலின் உக்கிர தாண்டவத்துக்கு மொத்தம் 70க்கும் அதிகமானோர் பலியாகினர். கொல்கத்தா பெருநகரத்தையே ஆம்பன் புயல் உருக்குலைத்துப் போட்டது. இந்த இரு மாநிலங்களின் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி…

Read More

மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்தை தாண்டியது இது முதல்முறையாகும். இந்தியாவில் இன்று(மே 22) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 660,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு மஹாராஷ்டிரா – 41,642 – 1,454 தமிழகம் – 13,967 – 94 குஜராத் – 12,905 – 773…

Read More

ஆம்பன் புயல் பாதிப்பு… பாதிக்கப்பட்டவர்களை கடவுள் காப்பாற்றுவார்… விராட் கோலி

கொல்கத்தா : ஆம்பன் புயலால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம், ஒடிசா பாதிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடே அசாதாரணமான சூழலில் உள்ளது. இந்நிலையில், மேலும் துயரம் கொடுக்கும் நிகழ்வாக ஆம்பன் புயல் தலைவிரித்தாடுகிறது. இதுவரை இல்லாத அளவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மிகப்பெரிய பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோரிக்கை இந்த புயல் இதுவரை இல்லாத அளவில் மேற்குவங்கத்தை அதிகமாக பாதித்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 12 பேர்…

Read More

அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் மின்சாரம் தாக்கி, வீடுகளில் இடிந்து போன்ற சம்பவங்களால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.கொல்கத்தா நகரத்தில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும்…

Read More

வாழ்த்துக்கள்

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராகப் பொறுப்பேற்க உள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் திரு.ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Read More

BREAKING | ஒரு லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு | இந்தியா

BREAKING | ஒரு லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு | இந்தியா 🔲இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்வு 🔲கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்வு 🔲கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்வு மத்திய சுகாதார அமைச்சகம்

Read More

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!

இந்திய ரயில்வே இயக்கும் ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் “தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை” பற்றி விளக்கத்தை அறிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளைக் கட்டாயமாக்கியுள்ளது. IRCTC புதிய விதி ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் “தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை” பற்றி அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இனிமேல், அத்தகைய பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவிற்கு புதிய கட்டாய விதி இரயில் பயணம் மேற்கொள்ளும் அணைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை பற்றி கட்டாயம் அறிந்திருப்பதை முதலில்…

Read More

‘இந்தியரை திருப்பி அழைத்து வர கூடுதல் விமானங்கள் இயக்கம்’ ; அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி : ‘வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வர, கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன’ என, வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார். ‘அமெரிக்காவில் தவிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களை அழைத்து வர விமானங்களை இயக்க வேண்டும்’ என, மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்திகளில், ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், சில விமானங்களை இயக்கி வருகிறோம். அவ்வாறு வந்தவர் களுக்கு தேவையான உதவிகளை, மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செய்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி, மாநில…

Read More

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 29 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்:கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 பேர் வெளி நாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள் ஆவர். மேலும் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆகும். எஞ்சிய ஒரு நபர் உள்மாநிலத்தை சேர்ந்தவர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் மொத்தம் 130 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Read More

கர்நாடகத்தில் நாளை முதல் பஸ், ரெயில்கள் ஓடும்- 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை

கர்நாடக மாநிலத்தில் பஸ் மற்றும் ரெயில் சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூரு:கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் ஊரடங்கு விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு கூறி உள்ளது. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தளர்வு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட…

Read More