Ratan Tata

இந்த வயதிலும் நாட்டுக்காக தீப ஒளி காட்டும் திரு ரத்தன் டாடா அவர்கள் !! ஏற்கனவே Rs. 1500 கோடி நிவாரண நிதிக்கு அளித்து உள்ளார் . உங்களை நினைத்து நாம் பெருமை படுகிறோம் 🙂 நன்றி ஐயா

Read More

#BeelaRajesh

சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம்.இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Read More

ஒரு வயதில் உயிருக்கு போராட்டம்..

சென்னை: இதயத்தில் ஓட்டை காரணமாக கஷ்டப்பட்டு வரும் சிறுவன் விநாயகமூர்த்திக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள். விநாயகமூர்த்திக்கு 1 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதிலேயே அவன் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறான். அவன் பிறந்த போது மொத்த குடும்பமும் சந்தோசமாக இருந்தது. ஆனால் அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின் எல்லோருக்கும் அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்கத்தில் இருந்தே அவனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை, அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது, விடாமல் கஷ்டத்தில் அழுது கொண்டு இருந்தான். அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் அவனுக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் டாக்டர் கோபி, குழந்தை விநாயகமூர்த்தியை சோதனை செய்துவிட்டு, அவனை ஏன் இவ்வளவு தாமதமாக மருத்துவமனை கொண்டு வந்தீர்கள் என்று கோபமாக பேசினார். அவனுக்கு செய்ய…

Read More

trichy people

திருச்சி மக்களே.. போலீஸ் இல்லைன்னு வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. டிரோன் மூலம் கண்காணிக்குது போலீஸ் திருச்சி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நேற்று முதல் டிரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவும், அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்துவதற்காகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் 14 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 12 வாகனங்கள் மூலம் மேற்படி வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலா்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொடா்ச்சியாக விழிப்புணா்வு செய்து வருகின்றனா் மேலும், திருச்சி மாநகரில் உள்ள 4 காவல் சரகங்களிலும் உள்ள அனைத்து காவல் நிலைய…

Read More

Udhayanidhi Stalin

சேதுராமன். நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More

ராக்கெட் அடுப்பு

தளத்தில் மணலை பரப்பி அதன் மேல் கடப்பா கல் போட்டு பூச்சு பூசியாச்சு. அதன் மேல் “ப “வடிவில் (3 1/2) செங்கற்களை அடுக்கி அதன் மேல் கனமான கிரில் கம்பி வைக்க வேண்டும். அதன் மேல் மீண்டும்” ப ” வடிவில் வைத்து அடுத்தடுத்து நான்கு கற்களை சுற்றி சுற்றி வைக்க வேண்டும்.மண் கொண்டு பூசி சாணம் கொண்டு மெழுக வேண்டும். இணையத்தில் Rocket stove பற்றி தெளிவான காணொளி உள்ளது. குறைந்த விறகில் நிறைய தீ… மற்ற விறகடுப்பு பயன்படுத்துவதை காட்டிலும் ஐந்தாறு மடங்கு அதிக பலன் என்கிறார்கள். முதல்” ப” துளையில் சோளம், கிழங்கு போன்றவைகளை சுட்டுக்கொள்ளலாம். மேலே பாத்திரம் வைத்து சமைப்பதோடு தணலில் க்ரில் செய்யலாம்… சுவரில் கரி படியாது. இன்னும் நிறைய பயன்பாடு உள்ளது என நினைக்கிறேன்…. பயன்படுத்தியதும் சொல்கிறேன்.

Read More