ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவர் கட்டி வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது

ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவர் கட்டி வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது

Read More

“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.

“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.                    தேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று, நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது,          ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக. தேசிய நல்லாசிரியர் தினம் அன்று, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் 2020, விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்          விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் (செஞ்சி தாலுக்கா) , அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.திலிப் ராஜு மற்றும் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி.சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.           இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

Read More

கட்டுப்பாடுகளுடன் வழிபாடு – பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

5 நபர்களுக்கு குறைவான நபர்கள் சேர்ந்து, விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

Read More

மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே.. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை.. முதல்வர் விளக்கம்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மத ஊர்வலங்களை நடத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. அதனை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து 10 நாட்கள் பஜனைகள் களைகட்டும். பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து மத பண்டிகைகள், விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா மதுரையில் ரத்து செய்யப்பட்டது. மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதே போல ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு…

Read More