விலகிய பொன்முடி.. விழுப்புரத்திற்கு நா.புகழேந்தி நியமனம்.. துரைமுருகன் போட்ட முதல் உத்தரவு

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார் இதேபோல் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து பொன்முடி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் துரைமுருகன் போட்ட முதல் உத்தரவுஇது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மணல் அள்ளுவதில் விதிமீறல் ஆய்விற்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன் பொன்னுச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கீழராஜகுலராமன் கண்மாயில் குடிமராமத்து பணி சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதிகளை பின்பற்றவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இதை தடுக்கவும், குடிமராமத்து பணியை கண்காணிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வெம்பக்கோட்டை தாசில்தார் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டது.

Read More

கொரோனா இருப்பதாக கூறி தனிமைப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து பேனர் வைத்த குடும்பத்தினர்

கோவை: கொரோனா வைரஸ் பாதிக்காக தங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி கோவை மாநகராட்சிக்கு நன்றி கூறி ஒரு குடும்பத்தினர் பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை ஹோப்ஸ் காலேஜ் அடுத்த ராமானுஜம் நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் 4 பேருக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநகராட்சி சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி நால்வருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதாக கூறி, வீட்டின் முன்பாக தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் செப்டம்பர் 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட வைரஸ் சோதனையில் நான்கு பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத தங்களுக்கு நோய் தொற்று உள்ளதாக…

Read More

BREAKING NEWS LIVE**

Containment zone தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.** அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.** மத்திய அரசு** ’அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’** 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல** செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்** மத்திய உள்துறை*: * UNLOCK-4.0 INDIA || செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ இரயில்கள் இயங்க அனுமதி..!**அரசியல், கலை, விளையாட்டு நிகழ்வுகளை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100 பேர்களுடன் நடத்தலாம்**செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது**திறந்தவெளி திரை அரங்குகள் 21 ம் தேதி முதல் செயல்பட அனுமதி**மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள்…

Read More

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக! 🔲தமிழகத்தில் 16-வது சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. 🔲இதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி குழுக்கள் (பூத் கமிட்டி) அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 🔲வாக்குச்சாவடிக்கான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர், இரண்டு துணை பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 🔲மேலும், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டப் பின்னர் ஒவ்வொரு குழுக்களிலும் 10 பேர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விரைவில் சூடு பிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

துாத்துக்குடி; மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழின் தலைநகராக மதுரையை அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும். மதுரை தமிழ் அன்னையின் பூமி. சங்கம் வளர்த்து தமிழ்கண்ட பூமி. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போதிய வளர்ச்சி இல்லை. வேலைவாய்ப்பில்லை. 60 ஆண்டுகளாக தமிழின் பெயரை சொல்லி ஆட்சிபுரிந்துள்ளனர். மதுரைக்கு, தமிழுக்கு என்ன பெருமை கிடைத்துள்ளது.ஜெ., முதல்வராக இருந்தபோது மதுரையில் பிரமாண்டமான தமிழன்னை சிலை அமைக்க வேண்டும் என்றார். ஜெ.,யின் கனவை நிறைவேற்ற, தற்போதைய அரசு மதுரையில்தமிழன்னை சிலை ஏற்படுத்தவேண்டும். ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தொழில்நகரங்களாக மாறக்கூடிய வகையில் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவித்தே ஆக…

Read More

அது அவர்கள் கருத்து.. அரசு கருத்து இல்லை.. தமிழகத்திற்கு 2வது தலைநகர் கிடையாது.. முதல்வர் அறிவிப்பு

தருமபுரி: தமிழகத்திற்கு சென்னை மட்டும்தான் ஒரே தலைநகரம், 2வது தலைநகரம் குறித்து அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில நாட்களாகவே, மதுரை மண்டலத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள், மதுரையை 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். மற்றொருபக்கம், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், திருச்சியை, 2வது தலைநகரமாக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தருமபுரியில் இன்று பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், இதுதொடர்பாக கேள்வி முன்வைத்தனர் நிருபர்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்களே, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, “அது அவர்களுடைய கருத்து.. அரசின் கருத்து கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார் முதல்வர். மேலும் அவர் தெரிவிக்கையில்,…

Read More