ஊரடங்கை சமாளிக்க உதவும் உள்ளங்கள்

ஊரடங்கை ஏழைகள் சமாளிக்கும் வகையில், பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். l தாம்பரம் நகராட்சியில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், நகராட்சியின் மருத்துவமனை ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை, கவுரவப்படுத்தும் விதமாக, மேற்கு தாம்பரம், காமராஜர் நலச்சங்கம் சார்பில், நகராட்சியின் துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என, 550 பேருக்கு, அரிசி, எண்ணெய் அடங்கிய, நிவாரண பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. புலிக்கொரடு பகுதியில், 100 தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. l எண்ணுார் அனல்மின் நிலையம், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய நிர்வாகம் சார்பில், துாய்மை பணியாளர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஏழைகளுக்கு, 5 கிலோ அரிசி, காய்கறிகள், மதிய உணவு போன்றவை வழங்கப்பட்டன.

Read More

சீனா முதலீடுக்கு,’கடிவாளம்’மத்திய அரசு அதிரடி

புதுடில்லி :சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள், இனி மத்திய அரசின் ஒப்புதலுடன் தான், இந்தியாவில் நேரடி முதலீடு மேற்கொள்ள முடியும். இதற்கான உத்தரவை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை பிறப்பித்துள்ளது.இந்தியாவில், ராணுவம், தொலைதொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய, மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதேசமயம், தகவல் தொழில் நுட்பம், கட்டு மானம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்து, பின், ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தால் போதும். தொழில் துவங்குவதை சுலபமாக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், கொரோனா தாக்கத்தால், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அன்னிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை சுலபமாக கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் நோக்கில், ‘அண்டை…

Read More

அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையத்தளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வருகிறது. புத்தகம் அச்சடிப்பதில் காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவி வரும் ‛கொரோனா வைரஸ்’ தொற்றால் தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால், மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் சமயத்தில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், கல்லூரி, பல்கலை.,கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிப்பு பணி இன்னும் துவங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து வகுப்பு…

Read More

வேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு “இல்லை” : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

வேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு “இல்லை” : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..! இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் 4.5 லட்ச ஊழியர்களுக்கும் வேலை இழப்புக் குறித்த பயம் வேண்டாம் என உறுதியாகக் கூறியுள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளைச் சமாளிக்கச் சில கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் தனது 4.5 ஊழியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில், யாரையும் பணிநீக்கம் மாட்டோம் என அறிவித்துள்ளது. ஆனால் ஊழியர்களுக்கான இந்த வருடச் சம்பள உயர்வை முழுமையாக ரத்து செய்துள்ளது டிசிஎஸ் நிர்வாகம். 40,000…

Read More

செம கோ ஆர்டினேஷன்.. இறுக்கி பிடிச்சு நடக்கும் வேலைகள்.. அட்டகாசமான அதிகாரிகள் கையில் தமிழகம்.. சபாஷ்

சென்னை: பெரிய அளவுக்கு இப்போதைக்கு நம்மிடம் எந்தவித மருத்து டெஸ்ட் கிட்-களும் இல்லைதான்.. ஆனால் சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கு.. அதேசமயம், அரசுத்துறையின் “கோ ஆர்டினேஷன்” சிறப்பாக இருக்கிறது.. அருமையாக செயல்பட்டு வருவதை பாராட்டியே ஆக வேண்டும்.. அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், ஊழியர்கள் வரை போற்றப்பட வேண்டியவர்களே! இது முற்றிலும் உண்மையே.. முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலாளர் இவர்களின் பணியை தினமும் நாம் நேரடியாக கண்டு வருகிறோம்.. மீடியாக்கள் மூலமாகவும் இவர்களது ட்விட்டர்வாயிலாகவும் நிறைய தகவல்களை காண முடிகிறது.. இதை தவிர கொரோனா அப்டேட்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது. அதேசமயம், இவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே அருமையாக வேலை பார்த்து வருகிறது.. முக்கியமாக கலெக்டர்கள்.. இவர்களை எவ்வளவு, எப்படி பாராட்டினாலும் தகும்… எந்நேரமும் விழிப்பாக இருக்கிறார்கள்… கிட்டத்தட்ட எல்லா மாவட்ட கலெக்டர்களுமே…

Read More

கொரோனாவை தடுக்க மே 3 வரை விமான சேவைகள் ரத்து

புதுடில்லி : கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, மே, 3ம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது, உலகையே கதி கலங்க வைத்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, 21 நாள் ஊரடங்கு முடிய இருந்த நிலையில், வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்து இருப்பதால், ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டித்து, பிரதமர், மோடி அறிவித்தார். சர்வதேச, உள்நாட்டு பயணியர் விமான சேவைகளுக்கான ரத்தும், வரும், 3ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் ரத்துஊரடங்கு முடியும் வரை, சரக்கு சேவைகளுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, முதலில், 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த, 21 நாட்களில், அரசு மற்றும் தனியாருக்கு, சரக்கு சேவைகளுக்கான வாடகை உட்பட எந்த கட்டணமும்…

Read More

tamilnadu-lockdown-will-be-extended-for-14-days-cm-calls-cabinet-meet/

லாக்டவுன்.. இன்று அமைச்சரவையை கூட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிரடி அறிவிப்புகளுக்கு வாய்ப்பு சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் (Lock down) நீட்டிப்பு அவசியம் என்று மருத்துவர் குழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அமைச்சரவையை கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவக் குழுவுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர், டாக்டர்கள் குழுவை சேர்ந்த டாக்டர் பிரதீபா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் பொது சுகாதாரம் மிக சிறப்பாக இருக்கிறது. அதை இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி பேசினோம். மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை அறை ஒதுக்கப்பட்டு உள்ளது, அதை பற்றியும் ஆலோசித்தோம். நோயாளிகளுக்கு, எந்த மாதிரி தேவை உள்ளது, அவர்கள் குடும்பத்தினருக்கு எந்த மாதிரி தேவை உள்ளது என்பது…

Read More