2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெறப்பட்ட, இரண்டு கோடி கையெழுத்து படிவங்களை, தி.மு.க., நேற்று(பிப்.,16), ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஜன., 24ல் நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவானது. இதன்படி, இம்மாதம், 2 முதல், 8 வரை, தமிழகம் முழுவதும் கையெழுத்து வேட்டை நடந்தது. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும், வீடு, வீடாகவும் சென்றும், 2 கோடியே, ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து, 82 கையெழுத்துகள் பெற்றனர் .சென்னை அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி சிலை அருகில், ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீரமணி, வைகோ, திருமாவளவன், தங்கபாலு,…

Read More

பதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் இந்த குட்டி பையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் கடந்த 11-ஆம் தேதி வெளியானது. எக்சிட் போல் முடிவுகளை வைத்து ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்பதால் கடந்த 10-ஆம் தேதியே ஆம் ஆத்மியின் கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை தந்தனர். அவ்வாறு வருகை தந்ததில் ஒரு சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

Read More

Thangam Thenarasu

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களைக் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கிய போது..

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி

ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இது குறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது.

Read More

tamilnadu budget ops

தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..! 1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு. 2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு. 3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. 4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு. 6. சென்னை – பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். 7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு. 8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு. 9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு. 10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு. 12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991…

Read More

எதற்கும், யாருக்கும் பத்தாத பட்ஜெட் ; ஸ்டாலின்

ஸ்டாலின்: துணை முதல்வர், பட்ஜெட்டை, 196 நிமிடம் படித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர், 159 நிமிடங்கள் படித்தார். மத்திய அரசை, எப்படி அ.தி.மு.க., பின்பற்றுகிறது என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. பட்ஜெட்டில், ‘ஜெ., மறைவுக்கு பின், இந்த அரசு நீடிக்காது என, சிலர் கூறி வந்தனர்’ என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில், ஜெ., சமாதியில் உட்கார்ந்து, தியானம் செய்தது; ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியது; ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தது யார் என்பது, அனைவருக்கும் தெரியும். அவருக்கு இது, பத்தாவது பட்ஜெட்; யாருக்கும் பத்தாத பட்ஜெட்; எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

Read More

‘குட்டி கெஜ்ரி’

புதுடில்லி : டில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு, கெஜ்ரிவால் போல் வேடமணிந்து கலக்கிய, ஆவயன் தோமர் என்று சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், அந்த கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டில்லி முதல்வராக, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால், 16ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார். அவ்விழாவில் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது

Read More