பொறுத்திருந்து பாருங்கள்… இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்… வானதி சீனிவாசன் அதிரடி

சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள வி.பி.துரைசாமியை தாம் மனதார வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மாற்றுக்கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணையக்கூடியவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், திராவிட இயக்கங்களில் இருந்த மூத்த நிர்வாகிகள் தேசியக் கட்சியான பாஜகவை தேர்ந்தெடுத்து இணைவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதன் மூலம் பாஜகவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம் எனவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள், கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் இணைவது சரியான விடையாக இருக்கும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வி.பி.துரைசாமியை போன்று யார் வந்தாலும் அதனை தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்ப்பதாக தெரிவித்தார். தமிழக…

Read More

500 குடும்பங்களுக்கு மளிகை தொகுப்பு

விருதுநகர்:விருதுநகரில் 500 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அரிசி, மளிகைப்பொருட்களுடன் கூடிய உணவுப்பொருள் தொகுப்பினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

Read More

திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமியின் பதவி பறிப்பு

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வி.பி. துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார். திமுகவில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் எனவும் அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடப்பதாகவும் வி.பி. துரைசாமி கூறினார்.

Read More

Manickam Tagore .B

முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 29வது நினைவு தினம் தீவிரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திருநகரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப. மாணிக்கம் தாகூர்M.P அவர்கள் ராஜீவ்காந்தி திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன் ராஜ்குமார் சுப்பிரமணியன், மதுரை OBC மாவட்டத்தலைவர் சரவண பகவான், முன்னாள் சர்க்கிள் தலைவர் நாகேஸ்வரன், பொன் மகாலிங்கம் வார்டு தலைவர்கள் சீனிவாசன் முனியசாமி,கண்ணன் RTI wing சத்தியன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More

சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க கமல்ஹாசன் திட்டம்

ரஜினிகாந்த், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைத்து சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சென்னை: கொரோனா பரபரப்பு ஓயத்தொடங்கி இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க தயாராகி வருகிறார். இது குறித்து அவரது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:- தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆண்டு வரும் 2 பெரிய கட்சிகளையும் எதிர்த்து களம் இறங்க இருக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே எங்களுக்கு எதிரிகள் தான். பா.ஜனதாவுடனும் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. திராவிட கட்சிகளின் மீது வெறுப்பில் இருப்பவர்கள் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் அது போதாது. எனவே நாங்கள் ஆட்சியை பிடிக்க வலுவான கூட்டணி தேவை. ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த கூட்டணியில் நிச்சயம் ரஜினி இணைவார். அவரது கொள்கைகள் குறிப்பாக ஊழலுக்கு எதிரான அவரது கருத்துகள் மக்கள்…

Read More

சாத்தூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு

சாத்தூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் 8 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அம்மா உணவகங்களில் 23.4.2020 முதல் 31.5.2020 வரை 39 நாட்களுக்கு 3 வேளைகளிலும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் வழங்கி உள்ளார். இந்த அம்மா உணவகங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரம், சமூக இடைவெளி, சமையல் முறைகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பொது மக்களிடம் உணவு வழங்கும் முறை குறித்து கேட்டறிந்தார். அம்மா உணவகத்தில் பணிபுரியும்…

Read More

அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன்…? பின்னணி காரணம் இது தான்…!

சென்னை: அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்வது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இன்று அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் பதவிகள் ஒரே நேரத்தில் டம்மியாகி உள்ளன. எதற்காக இந்த அதிரடி நடவடிக்கை, ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன் என்பது பற்றியெல்லாம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம் பேசிய போது அவர் தெரிவித்ததாவது; ”அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி தேவையில்லை என்பது கட்சியினரின் நீண்டகால கோரிக்கை. இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல ஏற்கனவே கலந்துபேசி எடுக்கப்பட்ட முடிவு. கட்சியின் அடித்தளமான கிளைக்கழகத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கிளைச் செயலாளர் பதவி வேறு; ஊராட்சி செயலாளர் பதவி வேறு. ஊராட்சி…

Read More

Kanimozhi Karunanidhi MP

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதிருநங்கைகள், முடி திருத்துவோர் மற்றும்பந்தல் தொழிலாளர்கள் 800 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினேன். உடன் மாவட்ட செயலாளர் திருமதி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ. , பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி மற்றும் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் அவர்கள்.

Read More

Manicka Tagore Member of parliament

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியூர் கிராமத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள்ஆய்வு செய்தார்.அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார் அந்த ஊராட்சியில் 800 பேருக்கு அட்டைதாரர்கள் பதிந்துள்ளார்கள்.ஆனால் 70 நபர்கள் தான் வேலை தான் வழங்கியுள்ளனர்.மேலும் அங்குள்ள பெண்களிடம் 100 நாட்களும் முழுமையாக வேலை செய்து உள்ளீர்களா? வேலை முழுமையாக வழங்கி உள்ளார்களா? என்று பல்வேறு குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.எனவே இந்த விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை தற்போது உள்ள விதிகளை மாற்றி 100% இந்த மாவட்டத்தில் வழங்க வேண்டும் அப்போதுதான் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் ஏழ்மையும் போக்க முடியும்.என்று கூறினார்.

Read More

TTV Dhinakaran

லட்சக்கணக்கான மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும். 1/2 @CMOTamilNadu தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால், 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். 2/2 #10thexampostpone

Read More