ஒரே நாளில் 17 பிரசவங்கள் சாதித்த சுகாதார நிலையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டானில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒரே நாளில் மட்டும் 17 பிரசவங்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. இக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களைதவிர நெல்லை மாவட்டம் பருவக்குடி, விஸ்வநாதப்பேரி, மாங்குடி,தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் கர்ப்பிணிகள் அதிகம் வருகின்றனர். இங்கு நவ.11ல் மட்டும் ஒரேநாளில் 17 பிரசவங்கள் நடந்துள்ளன.தலைமை மருத்துவர் கருணாகரப்பிரபு : 24 மணி நேரத்திற்குள் 17 பிரசவம் என்பது சிறிய அளவிலான இப்பகுதியில் சாதனைதான். இதில் 4 சுகப்பிரசவம், 13 அறுவை சிகிச்சை நடந்துதள்ளது. இதிலும் 9 பேர் 2 வது குழந்தை , 4 பேர் 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள். இச்சாதனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கடின உழைப்பு…

Read More

சதுரகிரியில் இன்று முதல் அனுமதி

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர். அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாளிலிருந்து 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவது வழக்கம். நவ.14ல் வரும் அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். முதியவர்கள், குழந்தைகள், நோய்பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும், பக்தர்கள் முகக்கவசமணிந்து வரவேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்திஉள்ளது.

Read More

விருச்சாசனத்தில் சாதித்த பள்ளி மாணவர்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடைபெற்ற குலோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் டால்வின் ராஜ் 15,ஒன்றரை மணி நேரம் 2 அடி உயர செங்கல் மீது விருச்சாசனத்தில் நின்று சாதனை படைத்துள்ளார் . ராஜபாளையம் தனியார் பயிற்சி மையத்தில் யோகா பயின்று வரும் இவர் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஒற்றை காலில் நிற்கும் சாதனையை முறியடிக்கும் விதமாக 7 செங்கற்களின் மீது 1 மணி 30 நிமிடங்கள் அசையாமல் ஒற்றை காலில் நின்று விருச்சாசனத்தை செய்து சாதனை படைத்தார்.குலோபல் அமைப்பை சார்ந்த நிர்மல் குமார் மற்றும் நடுவர்கள் சாதனையை பதிவு செய்தனர். தென்காசி எம்.பி., தனுஷ் குமார் நேரில் பரிசு வழங்கினார்.

Read More

ராம்கோ ஐ.டி.ஐ.,க்கு ரூ.2 கோடி

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ., தொடர் செயல்பாட்டை பாராட்டி மத்திய அரசு ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக, ராம்கோ தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் தெரிவித்தார். ராஜபாளையத்தில் நடந்த ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விழாவில் அவர் பேசியதாவது: தொடக்கம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து விருதுகள் பெற்று வருவதால் மத்திய அரசின் ஸ்டிரைவ் பிராஜக்ட்’மூலம் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. இதனால் பயிற்சி மைய உள்கட்டமைப்பு மற்றும் தரம் உயரும்,என்றார். ராஜபாளையம் மில்ஸ் தலைமை நிதி அலுவலர் ஞானகுருசாமி தொடங்கி வைத்தார். ஐ.டி.ஐ முதல்வர் மாடசாமி வரவேற்றார். பயிற்சி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Read More

மழையால் ஆறுகளில் நீர்வரத்து

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்று பகுதியில் இடி மின்னலுடன் பெய்த கன மழையால் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மேல் சாரலுடன் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் கொட்டியது. அணைத்தலை ஆறு, முடங்கியாறுகளில் நீர் வரத்து காணப்பட்டது. ராஜபாளையம் ஆறாவது நீர்த்தேக்கம் 15 அடியை எட்டியது.

Read More

பணியாளர்களுக்கு புத்தாடை

ராஜபாளையம் : கொரோனா காலத்தில் ராஜபாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் தனது 3மாத ஊதியமான ரூ. 3.15 லட்சத்தில் இருந்து 205 பேருக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கினார். தலைமை மருத்துவ அலுவலர் பாபுஜி, ஒன்றிய தலைவர் சிங்கராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்,ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ் பங்கேற்றனர்

Read More

தொடரும் மின் தடையால் பாதிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி சுற்றுபகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்தடையால் உற்பத்தி சார்ந்த தொழில் துறையினர் பாதிக்கின்றனர்.இப்பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக தொடர்ந்த மின் வெட்டு அவ்வப்போது தொடர்கிறது. விசைத்தறிக்கூடங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின. மின் துறையினர் கூறுகையில்,மெயின் சப்ளை பிளீடர் பகுதி தடையால் இப்பிரச்னை ஏற்பட்டது என்கின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன் இது போன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

நகரும் ரேஷன் கடை

ராஜபாளையம் : அனந்தப்ப நாயக்கர் பட்டி, அழகாபுரி, ஆப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் நகரும் ரேஷன் கடையை சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தொடங்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுப்பையா துரை, ஜெ. பேரவை விவேகானந்தன், சீத்தாராம் சுப்பிரமணியன், இளைஞர் அணி முருக பூபதி, மீனவரணி குட்டி பங்கேற்றனர்.

Read More

ராஜபாளையம் அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் முப்புடாதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா தொடங்கியது. 13 சமூகத்திற்கு பாத்தியப்பட்ட இவ்விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவை முன்னிட்டுகொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, சந்தனம் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிேஷகம் நடந்தது.முப்புடாதி அம்மன், வடசாகி அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக ஆக். 9 ல் பூக்குழி விழா நடக்கிறது. தினமும் அம்மன் சப்பரத்தில் உலா வருதலும் நடக்கிறது

Read More

பள்ளியில் மின்னொளி மைதானம் திறப்பு…

வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப் பள்ளி வாலிபால் மைதானத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரங்கள் துவக்க விழா, நவீனப்படுத்தப்பட்ட மின்னொளி மைதான திறப்பு விழா நடந்தது. பள்ளி முன்னாள் செயலாளர் சீதாராமன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் துரைசிங் திறந்து வைத்தார். செயலாளர் செல்வகணேஷ் புதிய மின் கோபுரங்களை இயக்கினார். கைப்பந்து கழக தலைமை செயலாளர் பொன்னியின் செல்வன், பொருளாளர் விநாயகமூர்த்தி பேசினர். பள்ளி உறுப்பினர்கள் அரிகரசுப்ரமணியம், விஜயா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ராம்சுந்தர் பாலசுப்பிரமணி ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Read More