கூம்பு வடிவ ஒலிபெருக்கிபேரூராட்சியில் விதி மீறல்

ராஜபாளையம்:செட்டியார்பட்டி பேரூராட்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மெயின் ரோட்டின் பல பகுதிகளில் தடை கூம்பு வடிவ ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதை பார்க்கும் பொது மக்கள் இவர்களே அரசு உத்தரவை மீறுகிறார்களே என முகம் சுளிக்கின்றனர்.காதுகளை பதம் பார்க்கும் இது போன்ற ஒலி பெருக்கிகளை அகற்ற போலீசார்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

கண்காணிப்பில் சதுரகிரி

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடிஅமாவாசை யொட்டி பக்தர்கள் வருவதற்கு தடை விதித்துள்ளநிலையில் இங்கு வருவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மகாராஜபுரம், தாணிப்பாறை உட்பட 13 வழிதடங்களில் போலீசார் நிறுத்தபட்டு கண்காணிக்கின்றனர்.

Read More

குளறுபடி அறிவிப்பால் குழப்பம்

ராஜபாளையம்:செட்டியார் பட்டி, கலங்காபேரியில் ஊரடங்கு அறிவித்தும் போக்குவரத்து முடக்கப்படாததால் இதன் நோக்கம் செயலற்று குழப்ப நிலை தொடர்கிறது செட்டியார் பட்டி சுற்றி தளவாய்புரம், முகவூர், முத்துச்சாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. முகவூர் ரோட்டின் ஒரு புறம் செட்டியார்பட்டி , மறுபுறம் முகவூர் ஊராட்சி வருவதால் ஒரு புறம் கடைகள் அடைப்பு,மறு புறம் திறக்கப்பட்டுள்ளது. முகவூர் பகுதியினர் அதிகம் நடமாடுகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்களும் இப்பகுதி வழியாக சென்று வருகிறது. இதனால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து வியாபாரிகள் , பொது மக்கள் செட்டியார்பட்டி பேரூராட்சி முன் முற்றுகையிட்டனர். தாசில்தார் ரமணன் தலையிட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்க கலைந்து சென்றனர்.

Read More

Rajapalayam news

சத்திரப்பட்டி:ஆறுமுகம் பழனிக்குரு சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர்களை பள்ளி நிறுவனர் ஆறுமுகம், தாளாளர் பணிக்குரு, துணை முதல்வர் சத்தியமூர்த்தி பாராட்டினர்.

Read More

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்று பகுதி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ஆவரம்பட்டி காளியம்மன், முடங்கியாறு ரோடு முப்பிடாரி அம்மன், பண்ணயைார் ஆர்ச் காளியம்மன், ஜவகர் மைதானம் முத்தாலம்மன் கோயில்களில் அம்மன் அலங்காரத்தில் வீற்றிருந்தார்.

Read More

பாழடிக்கிறாங்க ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்கள் நிரந்தர தீர்வுக்கு வழி காணாததால் விவசாயிகள் சோகம்

ராஜபாளையம்: மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொருட்டு கண்மாய் மராமத்து பணிகள் நடந்தாலும் ஆகாய தாமரைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வழிமுறைகளை இது நாள் வரை செயல்படுத்தாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் நீர்வள ஆதாரத்திற்கு முக்கிய காரணியாக உள்ளன கண்மாய்கள் . ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் எதிர்கால சந்ததியினரை காக்கும் பொருட்டு தொலை நோக்கு திட்டமாக ஏற்படுத்தப்பட்ட இக்கண்மாய்கள் காலப்போக்கில் பராமரிப்பின்றி காணாமல் போகின்றன. இதை நம்பி இருந்த விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை , ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் பல துார் வாரப்பட்டாலும் இவற்றில் சேரும் கழிவு நீரால் பெரும்பாலான கண்மாய்களில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து நீரை விரயமாக்குகின்றன.ஒவ்வொரு முறையும் கோடை காலங்களில் கருகும் இவை மீண்டும் துளிர் விட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மராமத்து…

Read More

Rajapalayam News

ராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக மிரட்டி வார்டில் அனுமதிக்கின்றனர். இந்த செயல் துடிப்பை கொரனோ தொற்று இல்லாத நபர்களுக்கு உடனடியாக பரிசோதனை முடிவுகளைச் சொன்னால் அவர்கள் வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவ உதவியாக இருக்கும். ஏனெனில் எல்லா நிறுவனங்களும் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிந்து கொண்ட பிறகுதான் தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கின்றன.

Read More

K. T. Rajenthra Bhalaji Minister

கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் எனது சொந்த நிதியிலிருந்து…ரூபாய் 3 லட்சத்தை நிதியுதவியாக அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்…#எங்கள்அமைச்சர்பெருமகனார் அவர்கள்.

Read More

Rajapalayam news 16-07-2020

இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 49,50,51 வது மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலிருந்து பாதம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு, கிஸ்மிஷ் பழம், பேரிச்சம்பழம், மாதுளை, சாத்துகுடி பழம், எலும்பிச்சை பழம், மஞ்சள் பொடி (பத்து வகையான பொருட்கள்) மற்றும் 1 லிட்டர் சுத்திகரித்த தண்ணீர் கேன் அடங்கிய பைகளை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (16.07.2020) மாலை 4 மணி அளவில் மருத்துவர்கள் மூலம் வழங்கினார். இந்நிகழ்வில் MLA அவர்கள், ஏழை எளிய பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இராஜபாளையம் தொகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்ப்படக்கூடாது என்ற நோக்கிலும் இந்த…

Read More

Rajapalayam MLA 15-07-2020

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் தொந்தியப்பன், நகர துணை செயலாளர் சரவணன், அவைத்தலைவர் பதிவுஜமால், நாகேஸ்வரன், குணா, சிங்கராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKVirudhunagar

Read More