முடிதிருத்தும் நிலையங்கள் மூடல்

சாத்துார்: சாத்துார் , சுற்றுக் கிராமங்களில் கொரோனா அதிகமாக பரவுவதை தொடர்ந்து முடிதிருத்தும் நிலையங்களை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை மூடப்படுவதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுபோல் வியாபாரிகள் நல சங்கம் சார்பிலும் ஜூலை 6 முதல் சாத்துாரில் காலை 6:00 முதல் மாலை 3:00 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.

Read More

நோயாளிகள் பிரிவு மாற்றம்

சாத்துார்: சாத்துார் பகுதியில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஹவுசிங் போர்டு காலனி புறநோயாளிகள் ,உள்நோயாளிகள் பிரிவு பழைய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு மாற்றப்படுகிறது.நாளை( ஜூலை 3 )முதல் ஹவுசிங் போர்டு காலனி கட்டடம் கொரோனா தடுப்பு பிரிவு ,தனிமை சிகிச்சை பிரிவாக செயல்படும்.

Read More

சிரிப்போம்…சிரிச்சிக்கிட்டே இருப்போம்…

சிரிப்பு என்பது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் அற்புத மாமருந்து. உடலில் சுருண்டு கிடக்கும் நரம்புகளை தட்டி எழுப்பும் சூட்சுமம் தெரிந்த கலை. தேவையான சிரிப்பு, அடக்கமான சிரிப்பு, அவசியமான சிரிப்பு, ஆழமான சிரிப்பு, எதார்த்தமான சிரிப்பு, போலிச்சிரிப்பு, நையாண்டி சிரிப்பு என சிரிப்பின் பட்டியல் நீளமானது. தற்போது கொரோனா காலகட்டத்தில் சகஜ வாழ்க்கை பல்லிளித்து வருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் சிரிப்பின் மகிமை அவசியமான ஒன்று என்கின்றனர் சிந்தனையாளர்கள்.

Read More

மருத்துவமனைக்கு சீல் வைப்பு

சாத்துார்:சாத்துார் முக்குராந்தல் தனியார் மருத்துவமனை செவிலியர் 4 பேர், லேப் டெக்னீசியன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு தாசில்தார் ராமசுப்பிரமணியன், நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் சீல் வைத்தனர். அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Read More

JULY 1st NATIONAL DOCTORS DAY

வணங்குகிறோம் தேசிய #மருத்துவர்கள் #தினவாழ்த்துக்கள் 01ஜூலை2020 JULY 1st NATIONAL DOCTORS DAY தன்னலம் கருதாமல் மக்கள் உயிர்காக்கும் அரும்பணியில் இரவு பகல் பாராமல் அயரது பணிசெய்துவரும் மருத்துவர்களின் சேவையை போற்றி வணங்குகிறோம்… DOCTORSDAY 01JULY2020

Read More

அஜாக்கிரதை! முகக்கவசம், கையுரை அணியாத வியாபாரிகள்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வியாபாரிகள் முகக் கவசமின்றியும் கையுறை அணியாமல் பொருட்களை விற்பனை செய்வது தொடர்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதால் தொற்றும் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக் கவசம் அனைவரும் அணியவேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக வியாபாரிகள் கட்டாயம் அணிய வேண்டும். இவர்கள்தான் தினமும் நூற்றுக்கணக்கான மக்களை சந்திக்கின்றனர். காய்கறிகள், பழங்கள், அரிசி , சர்க்கரை உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் பல்வேறு நகர்களில் இருந்து பலர் கைமாறி கடைகளை வந்தடைகிறது. இதனால் இவற்றில் கொரோனா வைரஸ் தொற்று படிந்திருக்கும் அபாயம் உள்ளது. அனைத்து வியாபாரிகளும் தாங்களாக முன் வந்து கையுறை, முகக் கவசம் அணிந்து பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்க வரும்…

Read More

கால்நடைகள் வளர்க்க அழைப்பு

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் கண்ணன் கூறியதாவது: சாத்துார், நரிக்குடி, வெம்பக்கோட்டை, வத்தி ராயிருப்பு வட்டாரங்களில் நிலம் இல்லாத கூலி தொழிலாளர்கள், விவசாயி களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கப் படவுள்ளது. இதற்காக ஒன்றியம் ஒன்றில் 45 பேருக்கு தலா ரூ.66 ஆயிரம் வழங்க ரூ.ஒரு கோடியே 18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

Sv Srinivasan Sattur

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களின் உதவியினாலும் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழாயிரம்பண்ணையில்(அருந்தயினர்,சலவை தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்துவோர் ) உள்ளிட்ட மக்களுக்கு அரிசிபை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் எம்.கிருஷ்ண குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.என்றும் மக்கள் பணியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப அணி . என்றும் மக்கள் நலப்பணியில் கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள்

Read More