கோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை

சிவகாசி : கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். திருத்தங்கல் கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு ரூ. 5 லட்சம், விருதுநகர் அருணாசல ஈஸ்வரர் கோயில் ரூ.1 லட்சம், ராஜபாளையம் விஸ்வகர்மா சமுதாய திருமண மண்டப கட்டுமான பணிக்கு ரூ. 3 லட்சம், ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் இந்து நாடார் உறவினர்முறை பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில், சுந்தரபாண்டியன் கிராமம் சாலியர் சமுதாய குஞ்சுமாடசாமி, பத்ரகாளியம்மன் கோவில், சாத்துார் முத்தாண்டிபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.75 ஆயிரம் என ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் நன்கொடையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். நகர செயலாளர் பொன்சகத்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி பங்கேற்றனர்.

Read More

போலீசாருக்கு ரத்த பரிசோதனை

சிவகாசி : சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் தைரோகேர் ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் போலீசாருக்கு ரத்த பரிசோதனை நடந்தது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் மணி, டி.எஸ்.பி., பிரபாகரன் செய்தனர்.

Read More

நாரணாபுரத்தில் கால்நடை மருந்தகம்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கினார்

சிவகாசி : நாரணாபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். கால்நடை மருந்தக திறப்பு விழா ,விலையில்லா கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது கிராமப்பகுதி வறுமையில் வாடுபவர்களை கண்டறிந்து விலையில்லா கறவைமாடுகள், வெள்ளாடுகள் மற்றும் அசில் இன கோழிகுஞ்சுகள் வழங்கப்படுகின்றன , என்றார் . இதன் பின்ஆர். ரெட்டியாபட்டி , செங்கமலநாச்சியார்புரம் ,சாமிநத்தம், பள்ளப்பட்டி,நாரணாபுரம் ஊராட்சியில் 391 பயனாளிகளுக்கு ரூ.58.85 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து செங்கமலநாச்சியார்புரம், சாமிநத்தம் ஊராட்சிகளில் கால்நடை மருந்தகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். தொழிலதிபர் பிரம்மன், ஊராட்சி தலைவர் தேவராஜன், மாவட்ட மருத்துவரணி விஜய்ஆனந்த்,…

Read More

சமத்துவ பொங்கல் விழா

சிவகாசி யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. முத்துலட்சுமி விவேகன்ராஜ் மற்றும் ஒன்றிய துணை தலைவர் விவேகன்ராஜ் அவர்களின் தலைமையில் கொண்டாடிய போது

Read More

சிவகாசியில் தொடர் மழையால் பொங்கல் விற்பனை மந்தம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.சிவகாசியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

சிவகாசியில் போக்குவரத்து விதியை மீறியதாக 1.31 லட்சம் வழக்குகள் பதிவு

சிவகாசி காவல் கோட்டத்தில் நடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.  சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,  சிவகாசி காவல்துறை கோட்டத்தில் நடந்த 2020ஆம் ஆண்டு 12 கொள்ளை வழக்குகளும் 30 திருட்டு வழக்குகளும் 12 கொலை வழக்குகளும் எட்டு கொலை முயற்சி வழக்குகளும் 43 அடிதடி வழக்குகள் 51 சாலை விபத்து வழக்குகளும், எழுபத்தாறு சாலை விபத்தில் காயமடைந்த வழக்குகளும், 26 கஞ்சா வைத்திருந்த வழக்குகளும் 41 பணம் வைத்து சீட்டு விளையாடிய வழக்குகளும் மதுபாட்டில்களை அனுமதியின்றி வைத்திருந்ததாக 426 வழக்குகளும்,  வெடிபொருள் சட்டத்தின் கீழ் 25 வழக்குகளும் 3 வழக்குகளும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு வைத்திருந்ததாக…

Read More

சத்துணவு அமைப்பாளருக்கான பயிற்சி முகாம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு அமைப்பாளருக்கான பயிற்சி முகாம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி . முத்துலட்சுமி விவேகன் ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Read More

2ம்ஆண்டு அடியெடுத்து வைப்பதற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்… 

மக்கள் குறை தீர்க்கும் மன்னனாக திகழும். #லயன்_வீ_கருப்பு ( எ ) #V_லட்சுமிநாராயணன் அவர்கள். #ஆனையூர்_ஊராட்சி_மன்ற_தலைவராக 2ம்ஆண்டு அடியெடுத்து வைப்பதற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

Read More

பதவி ஏற்பு விழா

சிவகாசி : சிவகாசி ஜே.சி.ஐ., லயன் இயக்க மூன்றாம் ஆண்டு பதவி ஏற்பு விழா நடந்தது. ஆனையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். ஜே.சி.ஐ., மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். மண்டல பயிற்சியாளர் தனிவேல் பாண்டியன், முன்னாள் மண்டல துணை தலைவர் ஜெயந்தி பேசினர். சமூக சேவை அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மதன், ரகு, மலைராஜன் பங்கேற்றனர். பொருளார் கோவிந்தராஜ் ஏற்பாடுகளை செய்தார்.

Read More