8 அம்மா உணவகங்களில் இலவச உணவு- செலவு தொகையை வழங்கியது அதிமுக

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவுக்கான செலவு தொகையை அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், தினக்கூலி பணியாளர்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் உணவின்றி கஷ்டப்படாமல் இருக்க அனைத்து நகராட்சிகளிலும் செயல்பட்டுவரும் 8 அம்மா உணவகங்களில் 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 8 அம்மா உணவகங்களில் 23.4.2020 முதல் 3.5.2020 வரை 11 நாட்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்குவதற்காக செலவுத் தொகை நாளொன்றுக்கு ரூ.78 ஆயிரம் வீதம் 11 நாட்களுக்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 8 அம்மா உணவகங்களிலும் 3 வேளைகளில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது…

Read More

டெல்லியில் இருந்து திரும்பிய 172 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் இருந்து திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 172 பேர் சிவகாசி அருகே உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி கூலித்தொழில் செய்து வந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். பின்னர் அவர்கள் தமிழகம் திரும்ப அரசு எடுத்த நடவடிக்கையால் டெல்லியில் வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயிலில் தமிழகம் வந்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 158 ஆண்கள், 12 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 172 பேர் விருதுநகர் வந்தடைந்தன

Read More

Sivakasi Ammk News

இதய தெய்வம் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி *சின்னம்மா* அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு *டிடிவி தினகரன்B.E ,MLA.,* அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு *SVSPமாணிக்கராஜா* அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *திருG.சாமிக்காளைB.A* அவர்களின் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் நலிவடைந்த நடனக்கலைஞர்கள் அனைவருக்கும் அரிசிபை, முகக்கவசம் மற்றும் காய்கறிகளை வழங்கினார் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,G.பழனிச்செல்வம் ,P.G.அழகுராஜா, N.வைரம்முத்து, சிவகாசி முருகேசன், சொர்ணயாபாண்டியன் , வைகுண்டமூர்த்தி ,முருகானந்தம், S.ராஜா தங்கம் ,G.ரமேஷ்குமார் ,தங்கதுரை, பன்னீர், G.பாலமுருகன், கிருஷ்ணசாமி, வெள்ளைப்பாண்டி ,வெள்ளைச்சாமி, முனியசாமி ,இதயக்கனி, பாஸ்கரன் ,வீரபாண்டி உடன் இருந்தனர்.

Read More

மனவளர்ச்சி குன்றியோர்-முதியோர்களுக்கு உணவு, உடைகள்: அமைச்சர் வழங்கினார்

சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிற்கிணங்க விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்டம் முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நிவாரண பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறுசுவை அசைவ உணவு மற்றும் உடைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். சிவகாசி அருகே ஜீவக்கல் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் உள்ள மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் 50 பேருக்கு தலா 2 புதிய உடைகள் மற்றும் அறுசுவையுடன் மதிய உணவு பணியாளர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கலெக்டர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு…

Read More

Ammk News Sivakasi

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.தலைமையில்சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டசெங்கமலநாச்சியாபுரம் பகுதியில் செங்கமலநாச்சியாபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் A.கிருஷ்ணசாமி அவர்களின் ஏற்பாட்டில் செங்கமலநாச்சியாபுரத்தில் உள்ள1.அருந்ததியர் காலனி,2. இந்திரா நகர் குடியிருப்பு3. விவேகானந்தர் காலனிபகுதியில் வருமையால் வாடும் சுமார் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்G.பழனிசெல்வம் ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,தங்கம், P.G.அழகுராஜா, தங்கதுரை ,அருந்ததியர் காலனி கிளை செயலாளர் காளியப்பன்,இந்திரா நகர் குடியிருப்பு கிளை செயலாளர் M.குமார் ,விவேகானந்தர் காலனி கிளை செயலாளர் L.வெள்ளத்துரை,திருப்பதி நகர் கிளை செயலாளர் அருணாசலம், கிழக்கு தெரு…

Read More

Sivakasi Ammk News

இதய தெய்வம் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி *சின்னம்மா* அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு *டிடிவி தினகரன்B.E ,MLA.,* அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு *SVSPமாணிக்ராஜா* அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திருG.சாமிக்காளைB.A* அண்ணன் அவர்களின் தலைமையில் செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் செங்கமலநாச்சியாபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் A.கிருஷ்ணசாமி அவர்களின் ஏற்பாட்டில் செங்கமலநாச்சியாபுரத்தில் உள்ள அருந்ததியர் காலனி, இந்திரா நகர் குடியிருப்பு மற்றும் விவேகானந்தர் காலனி பகுதியில் வருமையால் வாடும் சுமார் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் G.பழனிசெல்வம் ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,தங்கம், P.G.அழகுராஜா, தங்கதுரை ,அருந்ததியர் காலனி கிளை செயலாளர் காளியப்பன், இந்திரா நகர் குடியிருப்பு கிளை செயலாளர் M.குமார் , விவேகானந்தர் காலனி கிளை செயலாளர்…

Read More

செயல்படாத சுத்திகரிப்பு நிலையம் ; விரக்தியில் சிவகாசி மக்கள்

சிவகாசி : குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி பிச்சாண்டி தெரு, புதுத் தெரு உள்ளிட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக தன்னிறைவு திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு,அரசு நிதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. திறப்பு விழா பின்பு இதுநாள் வரை செயல்படவில்லை. அரசு நிதியோடு எங்களின் பணமும் வீணாகி விட்டதே என இப்பகுதியினர் கூறுகின்றனர். தற்போது குடிநீரை குடம் 10 ரூபாய் என தனியாரிடம் வாங்குகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டால் குடம் நீர் ரூ.5 என்பதால் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read More

மாத்திரைகளை எழுதி கொடுங்க; அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு

சிவகாசி : அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் என கவர்களில் எழுதி கொடுக்காததால் பலரும் பாதிக்கின்றனர். திருத்தங்கல், சிவகாசி அரசு மருத்துவமனை, சுற்றுப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருபவர்களில் 50 சதவீதத்தினர் வயதானவர்களே. இவர்களுக்கு வழங்கும் மாத்திரைகளை மொத்தமாக வழங்கி காலை, பகல், இரவு என வாயால் சொல்லி அனுப்பி விடுகின்றனர். குழப்பத்தில் மாத்திரையை மாற்றி சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உள்ளாகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் காலை, பகல், இரவு சாப்பிடுவதற்கு முன், பின் என தனித்தனி கவர்களின் எழுதி கொடுக்கின்றனர். நோயாளிகளும் குழப்பமுமின்றி சாப்பிடுகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் இந்நிலை இல்லை. இங்கும் மாத்திரைகளை கவர்களில் எழுதி கொடுக்க மருத்துவ துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read More

விவசாயிகளுக்கு பாராட்டு

ஏழாயிரம்பண்ணை : ஊரடங்கில் பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி காய்கறிகள் கிடைக்க செய்த ஏழாயிரம்பண்ணை, சங்கரபாண்டியாபுரம் விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.சங்க வட்டார தலைவர் சுப்பராஜ், காளிராஜ் தலைமை வகித்தனர். மாவட்டதலைவர் விஜய் முருகன் பேசினார். மனோஜ் குமார், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரபாண்டியன், எல்லப்பராஜ் , கதிர்வேல், தனுஷ்கோடி, கதிர்வேல் கலந்து கொண்டனர்.

Read More

K. T. Rajenthra Bhalaji Minister

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம் ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள் …

Read More