chennai/coronavirus-youngsters-playing-cricket-at-t-nagar-in-chennai/articlecontent-

சென்னை: சென்னை என்று கூறியதும் சட்டென அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை, சட்டசபை கட்டிடம்.. அடுத்தபடியாக தி.நகர். சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்.. அவ்வளவு ஏன், அண்டை மாநிலங்களில் இருந்து கூட ஷாப்பிங் செய்வதற்கான ஒரு பகுதியாக மக்கள் நினைப்பது தி.நகர். புடவை வேண்டுமா, நகை வேண்டுமா, செருப்பு வேண்டுமா, குண்டூசி முதல் விமானம் வரை ஒரே இடத்தில் கிடைக்கும் என்பார்களே, கிட்டத்தட்ட அது போன்ற ஒரு இடம் தான் சென்னை தி.நகர். எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். அதிலும் பண்டிகை காலம் என்று சொல்லிவிட்டால், மேலே இருந்து ஒரு பொருளைப் போட்டால் அது தரையில் சென்று விழாது.. யாராவது ஒருவரின் தலையில் தான் விழும் என்கிற அளவுக்கு இடைவெளியின்றி மக்கள் கூட்டம், நெரிசல் காணப்படும்.

Read More

ஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர்.. நச்சுன்னு நாலு குத்து.. பூஜா ராணி வெற்றி!

அம்மான்: ஆசிய ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் பூஜா ராணி நுழைந்துள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டியில் ஆடும் தகுதியைப் பெற்று விட்டார். ஜப்பானின் டோக்யோவில் இந்த ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையாக பூஜா ராணி தகுதி பெற்றுள்ளார். அம்மான் நகரில் நடைபெறும் ஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதியில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார். காலிறுதிப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் அவர் தாய்லாந்து வீராங்கனை பூர்னிப்பா சுட்டியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Read More

உலக அரங்கில் தடகளத்தில் வெற்றி வாகைசூடிய தமிழக காவலர் திருமதி.கிருஷ்ணரேகா

உலக அரங்கில் தடகளத்தில் வெற்றி வாகைசூடிய தமிழக காவலர் திருமதி.கிருஷ்ணரேகா அவர்களின் சாதனையை பாராட்டி உலகமகளிர் தின சிறப்பு நிகழ்வாக அவரது சிறப்பு காணொளியை தமிழக காவல்துறையின் சார்பாக வழங்குவதில் பெருமைக்கொள்கிறோம். தமிழக காவல்துறையின் முகநூல் பக்கத்தினை அனைவருக்கும் எடுத்துச்செல்ல தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.#Worldathleticsmeet #Championship #KanniyakumariDistrictPolice #Womensday #TNPolice #TruthAloneTriumphs

Read More

என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா

நியூயார்க் : பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2004இல் தன் பதின் பருவ வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகை அதிர வைத்தவர் தான் மரியா ஷரபோவா. சில ஆண்டுகளுக்கு முன் பார்மை இழந்தார். பல முறை காயம் காரணமாக சரியாக ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 2016இல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். பின் மீண்டும் டென்னிஸ் ஆடி வந்த மரியா ஷரபோவா, தற்போது தன் 32 வயதில் யாரும் எதிர்பாராத நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 1994 முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த ரஷ்ய பெண்ணான மரியா ஷரபோவா, டென்னிஸ் அரங்கில் ரஷ்ய நாட்டு வீராங்கனையாக பங்கேற்றார். 2004இல் விம்பிள்டனில், அப்போது…

Read More

#வெற்றி_பெற்ற_கால்பந்து_வீரர்களுடன்_பரிசு #வழங்கிய_பொது

#வெற்றி_பெற்ற_கால்பந்து_வீரர்களுடன்_பரிசு #வழங்கிய_பொது#ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.லட்சுமிநாராயணன்#Website linkwww.vlakshminarayanan.com

Read More

அருப்புக்கோட்டையில் மாரத்தான் போட்டி

அருப்புக்கோட்டை : சிங்கப்பூர் கன்ஸ்ட்ரக் ஷன் மாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, வனத்திற்குள் அருப்புக்கோட்டை சார்பில், தேச ஒற்றுமை மற்றும் உலக மக்கள் நன்மைக்காக, ‘மாஸ் மாரத்தான் போட்டி’ அருப்புக்கோட்டை அல்-அமீன் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. ஆண்களுக்கு ஒன்பதே முக்கால் கிலோ மீட்டர் துாரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் துாரம் ஓடினர். ஆண்கள் போட்டியை டி.எஸ்.பி., வெங்கடேசன் மற்றும் பெண்கள் போட்டியை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இருவரும் பரிசுகள் வழங்கினர். இதில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

ISL 2019-20

கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 83வது நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் 16 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரு எஃப்சி, 16 ஆட்டங்களில் 15 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் இருந்த‌ கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை நேருக்கு நேர் சந்தித்த‌து. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சென்னையின் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல்…

Read More