எங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!

மும்பை : இந்திய அணி வீரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுனில் இருந்த நிலையில், முதன் முறையாக இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். பிசிசிஐ கடந்த சில நாட்களாக வீரர்களை பயிற்சி செய்ய வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வைக்க தயார் ஆகி வரும் நிலையில் இது முதல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடர் ரத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடக்க வேண்டிய ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. லாக்டவுன் இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் லாக்டவுனில் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். கடந்த இரு மாதமாக யாரும் பயிற்சி செய்ய வெளியே…

Read More

அந்த 14 நாள் தான் சிக்கல்.. மழை காலம் முடிந்த உடன் ஆரம்பம்.. பிசிசிஐ முடிவு!

மும்பை : மழைக்காலம் முடிந்த பின் 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயாராகி வருவதாக அதன் தலைமை செயல் அதிகாரி கூறி உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள 2௦20 ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருவதால் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறது. 2020 ஐபிஎல் தொடர் 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுன் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் இருந்த சிக்கலும் முக்கிய காரணம். தற்போது லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால் ஐபிஎல் குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எப்போது நடத்தலாம்? ஐபிஎல் தொடர் இனி செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடத்தவே அதிக…

Read More

ஐபிஎல்-ஐ நடத்த ரகசிய திட்டம்

மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ரகசியமாக தயார் ஆகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. நான்காம் கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது பல்வேறு தொழில்களும் மீண்டும் துவங்கும் வகையில் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அதனால், நம்பிக்கையில் இருக்கும் பிசிசிஐ அடுத்து வரும் மாதங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்து, போக்குவரத்து அதிகரித்தால் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது ஐபிஎல் நடத்த தேதிகள் ஐபிஎல் நடத்த குறிப்பிட்ட தேதிகளை குறித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் ஐபிஎல் அணிகளுக்கும் கூறப்பட்டு விட்டதாகவும், அதனால் ஐபிஎல் அணிகள் குஷியில் வேலைகளை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன ஐபிஎல் தள்ளி வைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் மார்ச் 29 அன்று…

Read More

நான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா

இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி மிகச் சிறந்த அணிகளாக வலம் வருகிறது. இதில் மும்பை அணி கடந்த 7 வருடத்திற்குள் நான்கு கோப்பைகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஐந்து வருடங்களாக அந்த அணி படு மோசமாக சொதப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கேப்டன்களையும் மாற்றி வந்தது . ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஷான் பொல்லாக், டுவைன் பிராவோ ஆகிய பலர் கேப்டனாக இருந்தனர் ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க 2013, 2015, 2017, 2019 என ஒரு வருடம் விட்டு ஒருவருடம் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார்.…

Read More

இந்த வருஷம் மட்டும் ஐ.பி.எல் நடக்கலனா எத்தனை கோடி இழப்பு தெரியுமா ? – கங்குலி வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் பெரும் கனவாக இந்த ஐபிஎல் தொடர் இருந்தது. இந்த தொடரில் விளையாடி விட்டால் பொருளாதார ரீதியில் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் இருந்துவிடும் என்று பல வீரர்களும் நினைக்கின்றனர். ஆனால், தற்போது வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்களின் வருமானத்தில் சற்று அடி விழுந்துள்ளது. அதே நேரத்தில் பிசிசிஐயின் வருமானமும் அடிபட்டுள்ளது . அடுத்த 5 வருடங்களுக்கு போட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொள்ள பிசிசிஐ ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 16000 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திடம் வருடத்திற்கு 400 கோடி, என 1600 கோடி மற்றபடி சிறுசிறு ஸ்பான்சர்கள் இடம் 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.…

Read More

மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ இதுவே காரணம் – கம்பீர் புகழாரம்

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடருக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர்களின் ஆதரவும் பெருமளவில் பெருகியதால் வருடாவருடம் ஐபிஎல் தொடருக்கான வரவேற்பு அதிகரித்து. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மாறியது. இந்நிலையில் இந்த ஆண்டு பதிமூன்றாவது சீசனாக ஐ.பி.எல் நடைபெற இருந்த இந்தத்தொடர் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தொடரானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத இரு அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதற்கடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.…

Read More

2020 டிஎன்பிஎல் டி20 தொடர் தள்ளி வைப்பு.. தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அறிவிப்பு!

சென்னை : 2020 தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் நடத்தப்பட்டு வந்தது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. அந்த தொடரின் ஐந்தாவது சீசன் ஜூன் 10, 2020 அன்று துவங்க இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமலில் லாக்டவுன் மற்றும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரு மாதங்களாக உலகின் பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் தடைப்பட்டுள்ளன. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் லாக்டவுன் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டதால்…

Read More

எச்சிலுக்கு தடை… வியர்வை ஓகே… ஐசிசி கமிட்டியின் முடிவு… முன்னாள் வீரர்கள் கண்டனம்

டெல்லி: உலகெங்கும் கொரோனா தலைவிரித்தாடுவதால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது, எச்சிலை வைத்து பந்தை ஷைன் ஆக்குவதற்கு தடை விதிக்க அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக நடந்த வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கின்போது பல்வேறு முடிவுகளையும் அனில் கும்ப்ளே தலைமையிலான கமிட்டி எடுத்தது. அதன்படி அனைத்து சர்வதேச போட்டிகளிலும் மீண்டும் 2 “நான் நியூட்ரல்” அம்பயர்களை அறிமுகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதேசமயம், வியர்வையால் பந்தை பாலிஷ் செய்வதைத் தடுக்க வேண்டியதில்லை என்ற முடிவையும் அனில் கும்ப்ளே கமிட்டி எடுத்துள்ளது. இருப்பினும் போட்டியின்போதும் போட்டிக்கு வெளியிலும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பேண வேண்டிய சுகாதார முறைகள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது. கும்ப்ளே கமிட்டி முடிவு இதுதொடர்பாக கும்ப்ளே கூறுகையில், நாம் இப்போது அசாதாரணமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்போது எடுக்கப்பட்டுள்ள…

Read More

எதிரணியை வெளுத்துக்கட்ட தயாராகும் ரொனால்டோ… நாளை முதல் பயிற்சி

பிட்மான்ட் : கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் ரத்து செய்யப்பட்ட கால்பந்தாட்ட தொடர் வரும் ஜூன் 13ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்தர அணிகள் தங்களது கால்பந்தாட்ட பயிற்சிகளை திங்கள் முதல் துவங்கலாம் என்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்த 2 மாதங்களாக மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 5ம் தேதி இத்தாலி திரும்பியுள்ளார். ஒத்திவைக்கப்பட்ட கால்பந்தாட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் கால்பந்தாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கால்பந்தாட்ட வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கினர். கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஹீரோவாக உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்தார். பிரதமர் அறிவிப்பு இந்நிலையில் முதல்தர அணிகள் திங்கட்கிழமை…

Read More

ஜாம்பவானுக்கு நான் விடுத்த சவால் தவறானது- யுவராஜ் சிங்

ஜாம்பவானுக்கு விடுத்த சவால் தவறானது என்றும் கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பந்தை பேட்டின் விளிம்பால் மேல்வாக்கில் 25-க்கும் அதிகமான ஷாட்டுகள் இடைவிடாமல் அடித்து ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதை சவாலாக ஏற்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இதே போல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவரது சவாலை ஏற்று தெண்டுல்கர் சற்று வித்தியாசமாக களம் இறங்கி இருக்கிறார். தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு பார்க்காமலேயே சிறிது நேரம் பேட்டின் விளிம்பால் பந்தை தொடர்ச்சியாக மேலே தட்டிவிட்டபடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம்…

Read More