ஓட்டுச்சாவடி அலுவலர் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான கூட்டம் நடந்தது. அலுவலர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து தாசில்தார் சரவணன் பேசினார்.

Read More

மரக்கன்றுகள் நடுதல்

ஸ்ரீவில்லிபுத்துார் : சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அரசு கல்லுாரி முதல்வர் காமராஜ், ஆடிட்டர் நாசர், பொறியாளர் மகேந்திரன், பள்ளி தாளாளர் எட்வின்கனகராஜ், தலைமையாசிரியர் சாம்ஜெபராஜ் பங்கேற்றனர்.

Read More

அவசியமாகிறது ! சேய்கிராமங்களுக்கு நகரும் ரேஷன்கடைகள்…. பல கி.மீ., நடக்கும் மக்களுக்கு தேவை தீர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : , நவ.1-மாவட்டத்தில் அமல்படுத்தபட்டுள்ள நகரும் ரேஷன்கடை திட்டத்தினை ரேஷன் பொருளுக்காக பல கி.மீ., நடக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சேய்கிராமங்களுக்கும் சென்றடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டும். .மாவட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகர்புறத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் எளிதில் வாங்கும் விதத்தில் ரேஷன்கடைகள் அமைந்துள்ளன. ஆனால் உள்ளாட்சிகளில் தாய்கிராமங்களில் மட்டுமே இருக்கும் ரேஷன்கடைகளில் சேய்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சில கி.மீ.,துாரம் நடந்து சென்று பொருட்களை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாங்கி வருகின்றனர். இதனால் சேய்கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், முதிர்ந்தவர்கள், சைக்கிள் மற்றும் டுவீலர்கள் இல்லாதவர்கள் உணவுப்பொருட்களை தலையில் சுமந்து தட்டுத்தடுமாறி வாங்கி வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது நகரும் ரேஷன்கடை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளது. இத்திட்டம் சேய்கிராம பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக…

Read More

இடம்பெயர்கிறது வணிகவரி அலுவலகம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட வணிகவரி அலுவலகம் ராஜபாளையத்துக்கு மாற்றுவதால் ஸ்ரீவில்லிபுத்துார் மட்டுமின்றி வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில், மல்லி உட்பட பல்வேறு பகுதி வியாபாரிகள், தொழில் முனைவோர்கள்பாதிக்கின்றனர் . ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே 2 மாடிகளுடன் கட்டபட்ட கட்டடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில்ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் வணிகவரி அலுவலகங்கள் செயல்படவுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் அலுவலக ஆவணங்கள் இடமாற்றம் செய்யபட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் முழு அளவில் இடம் பெயர்கிறது.இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் வத்திராயிருப்பு தாலுாகா பகுதி வியாபாரிகள், தொழிலதிபர்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ., கவனத்திற்கு: ஸ்ரீவில்லிபுத்துாரில் கிருஷ்ணன்கோயில் தெருவிலுள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம் அருகில் பழைய நீதிமன்ற…

Read More

புத்தகம் வெளியீட்டு விழா

வத்திராயிருப்பு : முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி எழுதிய எனதுஅரசியல் பயணம் என்ற புத்தகம் வெளியீட்டு விழா வத்திராயிப்பில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் வெளியிட தாமரைஆசிரியர் மகேந்திரன் பெற்று கொண்டார்.முன்னாள் எம்.பி.,க்கள் அழகிரிசாமி, லிங்கம்,ஒன்றியக்குழு தலைவர்கள் மல்லிஆறுமுகம்,சிந்துமுருகன், தி.மு.க., நிர்வாகிகள் குன்னுார் சீனிவாசன், முனியாண்டி, அய்யாவுபாண்டியன் பங்கேற்றனர்.

Read More

நுால் வெளியீட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாள் கோயில் மண்டபத்தில் கவிஞர் சுரா எழுதிய ஆண்டாள் அந்தாதி நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஸ் கிளை தலைவர் கோதையூர் மணியன் முதல் பிரதியை வெளியிட, சிவகாசி கல்லுாரி தமிழ்துறை தலைவர்சிவனேசன் பெற்று கொண்டார். தமிழார்வலர் சந்திரசேகரன் , நுாலாசிரியர் கவிஞர் சுரா பேசினர். தமிழார்வலர்கள் துள்ளுகுட்டி, கண்ணன் பங்கேற்றனர்.

Read More

சதுரகிரியில் இன்று முதல் அனுமதி

வத்திராயிருப்பு,:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். மழை பெய்தால் மலையேறுவது நிறுத்தி வைக்கபடும் என வனத்துறை அறிவித்துள்ளது. பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புள்ளவர்களுக்கு அனுமதியில்லை. இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More

ஆக்கிரமிப்பு ஊரணி மீட்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஆக்கிரமிப்பால் மாயமான ஊரணி சிவகாசி சப்கலெக்டரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டு மீண்டும் ஊரணியாக்கப்பட்டு வருகிறது. பிள்ளையார்குளத்தில் 2 ஏக்கரிலிருந்த ஊரணியில் மரக்கன்றுகள் வைத்து தனிநபரால் ஆக்கிரமிக்கபட்டு தோப்பாக மாற்றபட்டிருந்தது. சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் விசாரணை செய்து ஊரணி ஆக்கிரமிப்பு செய்யபட்டதை கண்டறிந்தார். இதை தொடர்ந்து ஊரணி மீட்கப்பட்டது. தற்போது மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஊரணியாக்கும் பணி நடந்து வருகிறது.

Read More

வத்திராயிருப்பில் 126 மி.மீ., மழை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவி., சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. மழையால் வத்திராயிருப்பில் 126.8 மி.மீட்டரும், பிளவக்கல் அணையில் 29 மி.மீ, கோவிலாறு அணையில் 32.4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், தாணிப்பாறை பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து, அணை மற்றும் கண்மாய்கள் நிரம்ப வேண்டுமென்பது அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். ஸ்ரீவில்லிபுத்துாரில் 44 மி.மீட்டர் மழை பெய்திருந்தநிலையில், கீழப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவில் கருப்பசாமி என்பவர் புதிதாக கட்டியிருந்த வீட்டின் தரைதளம் 3 அடிக்கு மண்ணுக்குள் இறங்கியது. இதையடுத்து சுற்றுப்பகுதியில் குடியிருப்போர் வேறு இடத்திற்கு மாற்றபட்டு, மின்சப்ளையும் துண்டிக்கபட்டது.

Read More

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் நாளை துவக்கம்

வத்திராயிருப்பு:சதுரகிரியில் நவராத்திரி திருவிழா நாளை (அக்.17) ஆனந்தவல்லி அம்மன் மண்டபத்தில் காப்புக்கட்டுடன் துவங்குகிறது. மதுரை மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடக்கும் நவராத்திரி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் முதல் நாளில் காப்பு கட்டி ஒன்பது நாட்கள் கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பார்கள். இறுதிநாளில் அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நாட்களில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் காட்சியளிப்பார். இவ்விழாவில் நாளை காலை அம்மன் மண்டபத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதல், சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர். இவ்விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், என ஹிந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More