srivilliputhur news

நமது தலைவர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று நமது ஒன்றிய செயலாளர் யூனியன் சேர்மன் #மல்லிகு.#ஆறுமுகம் அவர்களிடம் வீடியோ காலில் நேரடியாக கொரோனா தொற்றால் மக்கள் படும் கஷ்டங்களையும் கழக நிவாரண பணிகளையும் “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கி வரும் நிவாரண பணிகளையும் கேட்டறிந்தார்….

Read More

ஸ்ரீவி.,யில் மருந்து, மளிகை தட்டுபாடு தேவையாகுது கலெக்டர் நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரையிலிருந்து தினசரி சரக்கு லாரிகள் இயங்காததால் ஸ்ரீவில்லிபுத்துாரில்மருந்து மற்றும் மளிகை பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.மதுரை மொத்த மருந்து விற்பனையாளர்கள் மூலம் பல்வேறு மாவட்ட மருந்து கடைகளுக்கு தினசரி லாரி சர்வீஸ் மூலம் மருந்துகள் கொண்டு வருவது வழக்கம். தற்போது லாரி சர்வீஸ் இயங்காததால் மருந்துகள் அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு நகர மருந்துகடைகளுக்கு மருந்துகள் அனுப்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்க்கான மருந்துகள் வரத்து குறைந்து நோயாளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதேபோல் மளிகை பொருட்கள் வரத்து இல்லாததால் கடைகளில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மதுரை சரக்கு லாரிசெட்டுகளை வாரத்தில் 2 நாட்களாகவது இயக்கி மாவட்டத்தில் மருந்து ,மளிகை பொருட்கள் தட்டுபாட்டை போக்க கலெக்டரின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

காப்பாற்றுமா கைத்தறித்துறை: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் ராட்டையில் நுால் சுற்றும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளதால் இவர்களுக்கு கூடுதல் நிதியுதவி செய்திட கைத்தறித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாவட்டத்தில் ராஜபாளையம், சத்திரபட்டி, புத்துார், புனல்வேலி, முகவூர், ஸ்ரீவில்லிபுத்துார், சுந்தரபாண்டியம், அருப்புகோட்டை பகுதிகளில் பல ஆயிரம் நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். அரசின் இலவச வேட்டி, சேலை மற்றும் காடாத்துணி தயாரிப்பு மூலம் தொடர் வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கைபாட்டை நடத்தி வருகின்றனர்.இத்தொழிலுக்கு தேவையான நுால்களை கைராட்டைகளில் நுாற்று கொடுக்கும் பணி , பாவு போடும் பணியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ராட்டையில் உற்பத்தியான நுால்கள் அனைத்தும் ஈரோட்டிலிருந்து மிஷின் மூலம் நெய்து வாங்குவதால் மரத்தடியிலிருந்து நுால் நுாற்றவர்கள் வேலை இழந்து தங்களின் ராட்டைகளை வீட்டு பரண்களில் துாக்கி வைத்தப்படி வருமானமின்றி உள்ளனர்.அதிலும் தற்போது…

Read More

தென்னந்தோப்புகளில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்துார்; மம்சாபுரம் பகுதி தென்னைதோப்புகளில் வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து நோய் தாக்குதலை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.தென்னை மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் பாதிக்கபடுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி தலைமையில் அலுவலர்கள் அம்மையப்பன், அழகுசுந்தரிஆய்வு செய்தனர்.பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா கூறுகையில், பாதிக்கபட்ட மரங்களின் கீழ்மட்ட ஓலைகளில் விசைதெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து ஏக்கருக்கு 2 விளக்குபொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்தும்,மஞ்சள் வண்ணஒட்டுபொறி ஏக்கருக்கு 20 எண்ணம், 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்தும், கிரைசோபிட் இரைவிழுங்கிகள், என்கார்சியா ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வெள்ளைஈ நோய் தாக்குதலை கட்டுபடுத்தலாம், என்றார். தென்னை விவசாயி சங்க தலைவர் முத்தையா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Read More

உதவிய உதவும் கரங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்துார் எக்ஸ்னோரா துாய்மை பணியாளர்களுக்கு ரோட்டரி சங்க பிரமுகர் கருமாரிமுருகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். எக்ஸ்னோரா சந்திரன் ,அலுவலர்கள் பங்கேற்றனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் மார்க்சிஸ்ட் சார்பில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் 200 பேருக்கு மாவட்ட செயலர் அர்ஜூனன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகள் திருமலை, ஜெயக்குமார் பங்கேற்றனர்.*தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வத்திராயிருப்பு பண்டகசாலை மூலம் பயனாளிகளுக்கு வழங்கபட்டது. தாசில்தார் ராம்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, பண்டகசாலை தலைவர் கோவிந்தன் பங்கேற்றனர்.

Read More

காலால் இயங்கும் கை சுத்திகரிப்பான்; கல்லூரி பேராசிரியர் வடிவமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன்கோவில்கலசலிங்கம் பல்கலை ஆராய்ச்சி பேராசிரியர் ஜெயக்குமார் கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கைக்காக காலால் இயங்கும் கை சுத்திகரிப்பான் இயந்திரம் செய்து மதுரை கலெக்டர்வினயிடம் டெமோ செய்து வழங்கினார்.தற்போது ஒருவர் சுத்திகரிப்பான் பயன்படுத்தியபிறகு அதை மற்றொருவர் பயன்படுத்தும்போதுகிருமி தொற்று பரவும் அபாயம் உண்டு. ஆனால் இந்த இயந்திரத்தில் 250 முதல் ஒரு லிட்டர் திரவபாட்டிலை பொருத்தி காலால் மிதித்து கிருமிநாசினியை பயன்படுத்தும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது. இதை நேரில் பார்வையிட்ட கலெக்டரிடம் பேராசிரியர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.பேராசிரியர் ஜெயக்குமாரை, வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத் தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.

Read More

Srivilliputhur News

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு மலையடிவார மாந்தோப்புகளில் பூக்கள் பூத்தநிலையில் காய்கள் சரியாக காய்க்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இப்பகுதியில் பல நுாறு ஏக்கரில் 200க்கு மேற்பட்ட மாந்தோப்புகள் உள்ளன. சரியான காலத்தில் காய்கள் காய்த்து உள்ளூர் மட்டுமின்றி மதுரை மார்கெட் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செண்பகதோப்பு மாம்பழங்கள் கொண்டு செல்லபடுவது வழக்கம்.இந்தாண்டு பூக்கள் பூத்தபின் தேவையான பருவத்தில் மழையின்றி நோய் தாக்கம் ஏற்பட்டு காக்கவில்லை. பலமுறை மருந்தடித்தும் போதியளவிற்கு காய்கள் காய்க்கவில்லை. ஏக்கருக்கு அதிகபட்சம் 20 டன் மாம்பழங்கள் விளையவேண்டியநிலையில் 8 முதல் 10 டன் காய்களே காய்த்துள்ளது. 100ல் 10 விவசாயிகளின் தோப்புகளில் தான் மா விளைச்சல் உள்ளது. மற்றவர்களின் தோப்புகளில் கொத்தாக காய்க்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்கள் தொங்குகிறது. ஆண்டில் 4 மாதம் மட்டும் விளையும் மாங்காயை நம்பி பல லட்சம் ரூபாய் முதலீடு செய்த…

Read More

srivilliputhur news

இன்று தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஐயா #கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவில்லிபுத்தூர் யூனியன் சேர்மன் ஒன்றிய செயலாளர் அண்ணாச்சி #மல்லி #கு #ஆறுமுகம் மற்றும் படிக்காசு வைத்தான் பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் பி எஸ் கே செல்வகுமார் படிக்காசு வைத்தான்பட்டி ஒன்றிய கவுன்சிலர் காந்தலட்சுமி முருகன் பி சேதுபாண்டியன் ஜெ பொன்ராஜ் பேங்க் தொமுச சங்கர் தொமுச கலைமணி முத்துலிங்காபுரம் ரெங்கசாமி தொட்டிய வெட்டி பாலமுருகன் சஞ்சீவி அஜித் படிக்காசு வைத்தான் பெட்டி கிளைக் கழகம் சார்பாக பிள்ளையார்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Read More

srivilliputhur news

இந்திய அரசு நேரு யுவகேந்திரா உம் திருவண்ணாமலையில் இயங்கி வரும் வல்லரசு இந்தியா இளைஞர் நற்பணி மன்றமும் ஸ்ரீவி டவுன் ரோட்டரி கிளப்பும் இணைந்து NYC l ஞான சந்திரன் அவர்கள் தலைமையில் குரானா வருமுன் தடுப்போம் கபசுர குடிநீர் எடுப்போம் என்ற முழக்கத்துடன் வீடுவீடாக சென்று கிராம மக்களுக்கும் மக்களை பாதுகாத்து வரும் காவல்துறையினருக்கும்தீயணைப்பு துறையினருக்கும் கபசுரக் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது மன்ற நிர்வாகிகள் jpகூடலிங்கம் nசீனிவாசன் k மாரிமுத்து m பாலமுருகன் pகூடலிங்கம் pசத்யராஜ் kமுத்துசாமி

Read More

Coronavirus awareness at Srivilliputhur

மக்கள் நலனுக்காக நாங்கள் ஓய்வின்றி துாய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கும் சராசரி ஆசைகள் உண்டு. ஆனாலும் மக்களின் நலனே முக்கியம் என்பதால் நகர் முழுவதும் உள்ள குப்பையை தினமும் உடனுக்குடன் அகற்றி வருகிறோம். அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகிறோம். நகராட்சி சார்பில் எங்களுக்கு மாஸ்க், கையுறை, காலுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பாக பணியில் ஈடுபட முடிகிறது. சிரமமான பணி என்றாலும் சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம்.- சேதுபாண்டி, துாய்மை பணியாளர் , சிவகாசி.மக்களின் ஒத்துழைப்பு அவசியம்தினசரி துாய்மைபணி என்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகும். இதனால் குடியிருப்புகள், நகரங்கள் துாய்மை பெறும். தினமும் காலை 6:00 மணி முதல் 11:00, பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை வெயில் மழை பாராமல் பணியாற்றுகிறோம். ஒவ்வொரு தெருவிலும் வாறுகால்கள் அடைத்து கொள்ளுமளவிற்கு கழிவுகள் கொட்டபடுகிறது.…

Read More