ஓராண்டில் 4 முறை பராமரிப்பு

நரிக்குடி : நரிக்குடி கம்பாளியில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்டிய ஓராண்டில் நான்கு முறை பராமரிப்பு பணி நடப்பதால் இதன் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்பள்ளியில் இட நெருக்கடியை தவிர்க்க ரூ. 1.69கோடி மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு 2019ல் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.திறந்த சில நாட்களிலே சிமென்ட் பூச்சு பெயர்ந்து மேற்கூரை கம்பிகள் தெரிந்ததால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதையடுத்து நடந்த பராமரிப்பு பணிகளும் சரிவர செய்யவில்லை. ஓராண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்தும் கட்டடத்தின் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தற்போது நான்காவது முறையாக பராமரிப்பு நடக்கின்றன. பள்ளி திறக்கப்பட்டாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கட்டடத்திற்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர் கிராமத்தினர்.

Read More

திரு.தங்கம்தென்னரசு MLA

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதி, காரியாபட்டி ஒன்றியம், அரசகுளம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிதண்ணீர் சின்டெக்ஸ் தொட்டியை திறந்து வைத்தார்

Read More

மருத்துவமனையில் இல்லை தீவிர சிகிச்சை பிரிவு

காரியாபட்டி:காரியாபட்டி அரசு மருத்துவமனையில் போதிய இடம் வசதி இருந்தும் இங்கு தீவிர சிகிச்சை பிரிவு இல்லாததால் விபத்தில் சிக்கும் நோயாளிகள் பலியாவதும் தொடர்கிறது. காரியாபட்டியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. காய்ச்சல், தலைவலி, பிரசவம் உள்ளிட்ட அனைத்திற்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். தினமும் 500 க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். நான்கு வழி சாலையில் நடக்கும் விபத்து, மற்ற இடங்களில் நடக்கும் விபத்துகளுக்கு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முதலுதவி செய்து மதுரை, விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.அவ்வாறு கொண்டு செல்லும் போது குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. ஆபத்தான நிலையில் கொண்டு செல்பவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் உயிர்பலி…

Read More

சென்னம்பட்டி கால்வாயில் தண்ணீர் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வந்ததால் மகிழ்ச்சி

காரியாபட்டி:சென்னம்பட்டி கால்வாயில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நீர்வரத்தை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரியாபட்டி கே. கரிசல்குளம், சித்து மூன்றடைப்பு கண்மாய்களுக்கு நீர் வரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னம்பட்டியில் குண்டாற்றின் குறுக்கே கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சரிவர மழை இல்லாததால் நீர் வரத்து எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவ்வப்போது திருமங்கலம் பகுதியில் பெய்யும் மழை நீர் வந்தாலும் கால்வாய் தூர்வாரப்படாமல் நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. தற்போது குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டதால் தற்போதைய கனமழையால் சென்னம்பட்டி கால்வாய் வழியாக கே.கரிசல்குளம் கண்மாய்க்கு நீர் வந்தது. கண்மாய் ஓரளவிற்கு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், கிணற்றில் தண்ணீர் ஊரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More

லாபம் அள்ளி தரும் சிப்பி காளான்: விரும்புவோருக்கு இலவச பயிற்சி

காரியாபட்டி:மழைக்காலத்தில் இயற்கையாக காளான்கள் முளைக்கும். அவற்றை சேகரித்து சமைத்தால் அவ்வளவு ருசியாக பக்கத்து வீடு வரை மணம் வீசும். அது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. தற்போது மழை பொழிவு இருந்தால் கூட இயற்கை மாற்றத்தால் முன்பு போல் அதிக அளவில் காளான்கள் முளைப்பதில்லை. அப்படியே முளைத்தாலும் அதை தேடிப் பிடித்து சேகரிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் செயற்கைமுறை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை வளர்க்க பலர் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். இயற்கை காளான்களை போல் ருசி, மணம் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல லாபம் உள்ள தொழிலாக இருப்பதால் இத்தொழிலை செய்ய பலரும் முன்வருகின்றனர். மதுரையை சேர்ந்த ராமலிங்கம் காரியாபட்டி கரியனேந்தலில் சிவபாலா இயற்கை…

Read More

அவசியம் * அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மேம்படுத்துவது * ரூ.பல லட்சம் ஒதுக்கியும் தூய்மை பணி கேள்விக்குறி

நரிக்குடி:மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சுகாதார பணிகளை மெற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ரூ.பல லட்சம் ஒதுக்கியும் துாய்மை, சுகாதாரம் மேம்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை பணிகள் சரிவர நடைபெறாததால் தொற்று நோய் கிருமிகள் பரவும் அபாயம் நிலவுகிறது. தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.பல லட்சம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் ஊழியர் பற்றாக்குறையால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் துாய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தூய்மைப்படுத்தாமல் மோசமாக இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள தினமும் ரூ.25 கோடி செலவு செய்வதாக அரசு அறிவித்துள்ளது.…

Read More

தெரு குழாய் பள்ளத்தில் கழிவுநீர்: கடுப்பாகும் கணக்கனேந்தல் மக்கள்

காரியாபட்டி:தெரு குழாய் பள்ளத்தில் கழிவு நீர்தேக்கம், கொசு தொல்லை என காரியாபட்டி கணக்கனேந்தல் மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர். போதிய குடிநீர் வசதி இன்றி குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். வாறுகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே குப்பை நிறைந்து கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலே கடிக்கும் நிலை உள்ளது. தெருக் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்குவதால் புழக்கத்திற்கான தண்ணீரை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சாக்கடையை தூய்மைப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன. வீட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி சகதியாக உள்ளதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் தெருக்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி தொற்று கிருமிகள் உருவாகின்றன. முக்கிய இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் மக்கள் நடாமாட சிரமப்படுகின்றனர்.

Read More

ரூ.65 லட்சம் செலவில் மினரல் பிளான்ட்

காரியாபட்டி:கனிமவள சீனியரேஜ் திட்டத்தின் கீழ் ஆவியூர், கள்ளிக்குடி விலக்கு, வக்கணாங்குண்டு நான்குவழிச்சாலையில் ரூ. 65 லட்சம் செலவில் சோலார் ஹைமாஸ் உள்ளிட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக ஒன்றிய தலைவர் முத்துமாரி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கம்பாளி, ஆத்தி குளம், பி. புதுப்பட்டி, அரசகுளத்தில் தலா ரூ. 10 லட்சம் செலவில் மினரல் பிளான்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாங்குளம், கள்ளங்குளம், சித்து மூன்றடைப்பு, தேனுார் விலக்கு, கல்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் தலா ரூ. 60 ஆயிரம் செலவில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Read More

Thangam Thennarasu Tiruchuli News

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க‘Winசெயலாளர் & செயல்வீரர் திரு #தங்கம்_தென்னரசு_BE_MLA அவர்கள், காரியாபட்டியில் தேசிய கொடியேற்றி வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களை கொளரவித்தார் 🙏

Read More

தந்தை கொலை; 5 ஆண்டுக்கு பின் மகன் கைது

காரியாபட்டி, அருப்புக்கோட்டை அருகே தந்தையை கொன்று காணாமல் போனதாக நாடகமாடிய மகனை 5 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் அக்கி ரொட்டி. இவரது மகன் நாராயணசாமி மாற்றுத்திறனாளி. காரியாபட்டி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். 2015ல் தந்தை காணாமல் போனதாக காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தார். 5ஆண்டுக்கு பின் தீவிர மாக விசாரித்த நிலையில் விசாரித்தபோது தந்தைக்கு வயதாக வீட்டுக்குள்ளே அசுத்தம் செய்ததால் பராமரிக்க முடியாமல் கொலை செய்தேன். தென்காசியில் உள்ள நண்பர்களை வரவழைத்து சுக்கிலநத்தம் முள்காட்டுக்குள் எரித்ததாக கூறினார். இவரை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ.,க் கள் வினோத்குமார், தமிழழகன் கைது செய்து உதவிய நபர்களையும் தேடி வருகின்றனர்.

Read More