Kariapatti Town in Tamil Nadu

காரியாபட்டி; பதிவு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வரும் நிலையில் பதிவு செய்தும் புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வரும் பலருக்கு அரசு நிவாரண தொகை வழங்கி வருகிறது. தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கொரோன ஊரடங்கால் வேலை இன்றி சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. விழிப்புணர்வு இல்லாததால் பலர் புதுப்பிக்க தவறியதால் நிவாரணம் கிடைக்காது ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பு 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டும் பெரும்பாலான தொழிலாளர்கள் விழிப்புணர்வு இன்றி புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். புதுப்பித்து தருவதாக தொழிற்…

Read More

Thangam Thenarasu

திருச்சுழித் தொகுதி, பரளச்சி மற்றும் கல்லூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று மருத்துவர் மற்றும் செவிலியருக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதுடன் கொரொனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.

Read More

Thangam Thenarasu

நேற்றும்- இன்றும், திருச்சுழித் தொகுதியில் அமைந்துள்ள முடுக்கன்குளம், அ.முக்குளம் மற்றும் முஷ்டக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், காரியாபட்டி பேரூராட்சிப்பகுதிகளிலும் கொரொனா நோய்த் தொற்று நடவடிக்கைகளைப் பார்வையிட்டு நிலமைகளை ஆய்வு செய்ததுடன், கிராமப் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று தீர்வு வேண்டினோம். ஆட்சியரும் அவற்றைக் கவனத்தில் கொண்டிருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் உணர்ந்தேன். 😊🙏

Read More

many more happy returns of the day god bless you

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. Thangam Thenarasu, B.E, MLA, அவர்கள் வாழ்க பல்லாண்டு…!! 🙂 😀 🎂🍫💐

Read More

Thangam Thenarasu

திருச்சுழி அரசு மருத்துவமனை, நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருச்சுழி நியாய விலைக்கடை ஆகியவற்றைத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுரைப்படி ஆய்வு செய்ததுடன் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினோம். அதேபோல மல்லாங்கிணர் பேரூராட்சிப் பணியாளர்களுக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது.

Read More

Thangam Thenarasu

காலையில் முதல் அழைப்பு! கழகத் தலைவரிடம் இருந்து! கவனத்துடன் இருந்து களப்பணியாற்றிட வேண்டும் என்ற அவரது அறிவுரையில் கனிவும், பொது மக்கள் நலனுக்கான கரிசனமும் நிறைந்திருக்கக் கண்டேன். இக்கட்டான இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி நிறைவேற்றப்படுவதை எல்லா வகையிலும் உறுதி செய்ய வேண்டியதின் அவசியத்தை தனது உரையாடலின் ஒவ்வொரு நிமிடத்திலும் வலியுறுத்தினார். அவரது அறிவுரைப்படியே ஆங்காங்கே கழகத்தோழர்கள் தம்மால் இயன்றவகையில் எல்லாம் இயங்கி வருவதை எடுத்துச் சொன்னேன். நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும், அவற்றின் தரத்தையும், முறையாக அவை பொதுமக்களுக்கு வழங்கப்பெறுவதையும் ஆய்வுசெய்திட வேண்டும் என்ற அவரது ஆணைக்கிணங்க , இன்று நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். பொதுமக்களில் பலரும் முகக்கவசம் இன்றியே அங்கே வந்திருப்பது கண்டேன்.இந்த வகையில் இன்னும் களத்தில் விழிப்புணர்வு அதிகமாகவே தேவைப்படுகிறது.

Read More

Thangam Thenarasu

கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் நகரத்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் தம்பி ராஜகுரு ஏற்பாட்டில், காய் கனி சந்தையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வுப் பணி மேற்கொண்டோம்

Read More

திருவாரூர் தேரழகு!

திருவாரூர் தேரழகு!திருவிடைமருதூர் தெருவழகு!கும்பகோணம் கோயிலழகு!மன்னார்குடி மதிலழகு!வேதாரண்யம் விளக்கழகு! நேற்று சட்டப்பேரவைக் கேள்வி நேரத்தில்.😊

Read More

வாழ்விலொரு திருநாள்!

இன்றைக்குச் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி முடித்ததும், தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பு என் நெஞ்சத்தை நெகிழ வைத்தது. என் தலைவரின் வாழ்த்து எனக்குக் கிடைத்த வரம்; நான் பெற்ற உரம்!😊🙏 #பொக்கிஷம்

Read More