விருதுநகர் மாவட்டம் 06.04.2020

விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், விருதை சிறகுகள் சமூக நல அமைப்பினருடன் இணைத்து, 144 ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்ற நபர்களுக்கு உணவு வழங்கினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

விலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர் மதுரை, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான விலங்குகள்¸ பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி தவித்து வருகின்றன. இதனை அறிந்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் மாநகராட்சி உதவியுடன் 04.04.2020- ம் தேதியன்று விலங்குகளுக்கு வனத்துறையினர் ஏற்கனவே அமைத்து இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பியும், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக வழங்கினார்கள். இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.#MaduraiCityPolice #Helpingtoanimal #TNPolice #TamilNaduPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

*விருதுநகர் மாவட்டம் 05.04.2020* விருதுநகர் NGO காலனியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் காய்கறி வாங்கச் சென்றபோது விருதுநகர் பொட்டல் அருகில் ரூபாய் 4000/- ஐ தவறவிட்டுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரி பொட்டல் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அன்புதாசன் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் திரு. லெனின் சுந்தர், திரு.முத்து அய்யனார் ஆகியோர், சிசிடிவி காணொளி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், மகேஸ்வரி தொலைத்த பணத்தை சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேற்படி நபரிடம் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், மகேஸ்வரியிடம் பணத்தை ஒப்படைத்தனர். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

புகைப்படத்தில் உள்ள அறிகுறிகள் தென்பட்டால் தயக்கமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தை அணுகவும். தாமதிப்பது நமக்கு மட்டுமல்லாமல் நம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். #COVID19#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

COVID19 #Virudhunagar

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, மளிகை பொருட்களை காவல் நண்பர்கள் குழு(FRIENDS OF POLICE) மூலமாக பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தினை, விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.S.R.சிவபிரசாத் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். COVID19 #Virudhunagar szsocialmedia1 #TNPolice TurhtAloneTriumphs

Read More

Police provides food

அருப்புக்கோட்டை : கொரோனா ஊரடங்கால் ஆதரவற்றோர் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் உணவிற்கு சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு உள்ளம் கொண்டவர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.அந்தவகையில் அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஏற்பாட்டில் ஸ்டேஷன் பின்புறம் சமையல் கூடம் அமைத்து 3 வேளை உணவுகளை போலீசார் சுடசுட தயார் செய்து வழங்குகின்றனர். பணி முடிந்தும் ஓய்வு நேரத்தில் இருக்கும் போலீசாரே இப்பணியில் ஈடுபடுகின்றனர். தனது சொந்த செலவில் தினமும் வழங்க இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வட மாநிலத்தவர்களுக்கு சப்பாத்தி தான் முக்கிய உணவு என்பதால் அவர்களுக்கு கோதுமை மாவு, எண்ணெய் தனியாக வழங்குகிறார்.

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.R.ரமேஷ் அவர்கள், மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அறிவித்துள்ள 144 தடை உத்தரவை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும்,கொரோனா வைரஸ்தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

நாம் ஒன்று சேர்ந்து கைதட்டினாலே…

விருதுநகர்: உலகில் அதிக உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மருத்துவக் குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிவுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் 300 பேரை தாண்டியுள்ளது. கொரோனாவை காட்டிலும் வேகமாக பரவி வரும் வதந்திகளை அரசாங்கமும் அடக்கி வருகிறது. இந்நிலையில் தங்களை அயராத பணியில் ஈடுபடுத்தி கொண்ட சுகாதார ஊழியர்கள், நர்ஸ்கள், டாக்டர்களின் சீரிய சேவையை போற்றும் வகையில் நேற்று மாலை 5:00 மணி முதல் 5:05 வரை கை தட்டி உற்சாகபடுத்துமாறு நாட்டின் குடிமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் கரகோஷங்கள் விண்ணை பிளந்தன. விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், டிராபிக் போலீசார் உட்பட பலர் கைதட்டி டாக்டர்களை உற்சாகப்படுத்தினர்

Read More

Virudhunagar District Police

மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் அறிவுரையின்படி, விருதுநகர் மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் மூலமாக மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட காவல்துறை. #TNPolice#TruthAloneTriumphs#szsocialmedia1#Virudhunagar

Read More

#tnusrbsiresult #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.#tnusrbsiresult #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Read More