விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மத்திய, மாநில அரசுகளின் ஆணை படி ஜன. 18 முதல் பிப். 17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம் இணைந்து பெண்கள் பங்கேற்கும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்தார். எஸ்.பி.,பெருமாள் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனமும் ஊர்வலத்தில் பங்கேற்றது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி எம்.ஜி.ஆர்., சிலையில் முடிந்தது. துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், முருகன், போக்குவரத்து கழக துணை மேலாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் : சாலை…

Read More

Virudhunagar District Police news 21-01-2020

21.01.2021 விருதுநகர் மாவட்டம் 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

நான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு

விருதுநகர் : விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நான்கு வழிச்சாலையின் விபத்து பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜன.18 முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் பூரணலதா, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துணை திட்ட மேலாளர் சிவபெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் விபத்து பகுதிகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலக சந்திப்புகளில் நடை பாதையில் எச்சரிக்கை கோடுகள் வரையவும், சென்டர் மீடியன்களை 3 அடிக்கு உயர்த்தவும், கணபதிமில் சந்திப்பில் சர்வீஸ் ரோடு, ஹைமாஸ் விளக்குகள், வடமலைக்குறிச்சிஆற்று பாலத்தின் இருபுறமும் கூடுதல் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

Read More

பள்ளி வகுப்பறையே எங்கள் சொர்க்கம்

பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டிய மாணவர்கள் உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றால் பள்ளிக்கு செல்லாமல் ஊரடங்கு பெயரில் 10 மாதங்களுக்கும் மேல் வீட்டில் முடங்கினர். பெயரளவில் ஆன்லைன் வகுப்புகள், சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்க முடியாத நிலையில் வாட்ஸ் ஆப், வீடியோ என ஆசிரியர்கள் முகம் காணாமல் கல்வி கற்றனர். ஒரு வழியாக 10, பிளஸ் 2 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் பள்ளியை நோக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர். விருதுநகரில் 388 பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர் வருகை இருந்தது. கொரோனா தாக்கத்தில் மீண்டு(ம்) வந்த மாணவர், ஆசிரியர்கள் முதல் நாள் அனுபவம் குறித்து…

Read More

மாண்பை பறைசாற்றும் பொங்கல்; பெருமிதம் கொள்ளும் பெண்கள்

தமிழர்கள் பல விழாக்களை கொண்டாடினாலும் தை முதல் நாளன்று கொண்டாடப்படும் பொங்கல் தான் பாரம்பரியம் மிக்கது. இது மாண்பை பறைசாற்றும் பண்பாட்டு விழாவாகும். நன்றி செலுத்துவது, உழைப்பை அங்கீகரிப்பது போன்ற பல உயரிய நோக்கங்களை கொண்டா விழா தான் பொங்கல் திருநாள். மார்கழி கடைசி நாளில் போகி கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டை புது பொலிவோடு மாற்றுவர். பிற்காலத்தில் இந்த விஷயம் மருவி பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதும் சேர்ந்து விட்டது. தை முதல் நாளில் அதிகாலையில் குளித்து சூரிய பகவானை வணங்கி வாசலில் கோலமிட்டு புதுப்பானை வைத்து புது அரிசியிட்டு பொங்க வைப்பர். தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில்…

Read More

இரண்டாவது நாளில் 153 பேருக்கு தடுப்பூசி

விருதுநகர் : விருதுநகரில் ஏழு மையங்களில் இரண்டாவது நாளாக 153 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகள், திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட ஏழு மையங்களில் நேற்று 27 பேர், சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னுார், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனை ஆகிய மையங்களில் 126 பேர் என மொத்தம் 153 பேர் என இரண்டு நாள் முகாமில் மொத்தம் 333 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கன்னிச்சேரி புதுார், மல்லாங்கிணர், நரிக்குடி, சிவகாசி வட்டாரத்தில் தலா ஒரு தடுப்பூசி மையங்கள் துவங்கப்படவுள்ளது.

Read More

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா…

சிவகாசி : சிவகாசியில் எம்.ஜி.ஆர்., 104 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரின் உருவ படங்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். சிவகாசி காரனேசன் காலனியில் கொடியேற்றினார். நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நிர்வாகிகள் கதிரவன், விஜய் ஆனந்த் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை: அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் யோகவாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலர் சங்கரலிங்கம், அவை தலைவர் அசோக் வேல்சாமி, முன்னாள் ஒன்றிய செயலர் கொப்பையா ராஜ், நிர்வாகிகள் மோகன்வேல் பங்கேற்றனர். காரியாபட்டி: ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், முருகன், நகர செயலாளர் விஜயன் பங்கேற்றனர். நரிக்குடி வீரசோழனில் ஒன்றிய துணை தலைவர்…

Read More

மருத்துவ கல்லூரி கட்டுமானம் துரிதம்; தேர்தல் அறிவிப்புக்குமுன் திறக்க ஏற்பாடு

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணிதுரிதமாக நடத்தும்படி பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மருத்துவ கல்லுாரி திறப்பு விழா, பல் மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா என இரண்டு விழாக்களையும் பிப்.,12ல் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கரில் ரூ. 120 கோடி மதிப்பில் அமைய உள்ளஅரசு மருத்துவ கல்லுாரி, நிர்வாக அலுவலகம், டீன் குடியிருப்பு, மாணவர் விடுதி மற்றும் ரூ.57 கோடி மதிப்பில் தலைமை அலுவலகம் கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை (மருத்துவம்) துரிதமாக மேற்கொள்கிறது. 2021 மார்ச் 31க்குள் திறப்பு விழா காண முடிவு செய்யப்பட்ட நிலையில் மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரத்திற்குள் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதற்குள் மருத்துவ கல்லுாரியை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்துகட்டுமானப்பணியை கலெக்டர் கண்ணன்…

Read More

ஓட்டுக்காக ராகுல் வரவில்லை: எம்.பி., பேட்டி

விருதுநகர் : விருதுநகரில் எம்.பி.,மாணிக்கம் தாகூர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அழைப்பின் பேரில் தான் ராகுல் கலந்து கொண்டார். ஓட்டுக்காக வரவில்லை. அமைச்சர் உதயகுமாருக்கு தமிழர், விவசாயிகள் குறித்து தெரியாது. காமெடி நடிகர் வடிவேல் இடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிடித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்.மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நெல், மக்காச்சோளம் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சிவகாசியில் ரயில்வே மேம்பால பணி அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Read More

7 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்: இன்று துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்குகிறது.மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் என 9720 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை , திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி, ராஜபாளையம்அரசு மருத்துவமனைகள், எம்.புதுப்பட்டி, குன்னுார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று துவக்கப்படுகிறது.விருதுநகர் அரசு மருத்துவமனையில் காலை 10:30 மணிக்கு கலெக்டர் கண்ணன் தலைமையில் முகாம் துவக்கப்படுகிறது.தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை மருந்து கோடவுனிலிருந்துகோவிஷீல்டு தடுப்பூசி பெட்டகம் விருதுநகர் மருந்து கோடவுனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கோடவுனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More