பொது மருத்துவ முகாம்

சிவகாசி : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை திட்டத்தின் கீழ் சிவகாசி ஆனையூர் ஊராட்சி மற்றும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரிசர்வ்லைன் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வைரகுமார் தலைமையில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிறுநீர் மற்றும் சளி பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட்டது. மகப்பேறு நலம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரம் குறித்த கண்காட்சி நடந்தது. சிவகாசி ஒன்றியம் துணை தலைவர் விவேகன்ராஜ், ஊராட்சி செயலர் நாகராஜ் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Read More

மின்னல் வேக ஓட்ட இளைஞருக்கு பயிற்சி அளிக்க திட்டம் : கிரண் ரிஜிஜூ

உசேன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தும் விதமாக அவருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா போட்டி நடைபெற்றது. எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர், சகதியுடன் தடம் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்ற இளைஞர், பந்தய தூரத்தை வெறும் 13.62 நொடியில் கடந்தார். அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் சீனிவாச கவுடா கடந்துள்ளார். உலகில் மிக வேகமாக ஓடும் மனிதராகக் கருதப்படும் உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் 100 மீட்டர் ஓட்ட போட்டியைக் கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. அதனை முறியடிக்கும் விதமாக சீனிவாச…

Read More

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar

Read More

முதல்வர் வருகைக்காக டி.ஐ.ஜி., ஆய்வு

விருதுநகர் : விருதுநகரில் முதல்வர் வருகையையொட்டி டி.ஐ.ஜி., ஆனி விஜயா மருத்துவ கல்லுாரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அடிக்கல் நாட்டும் இடம், மக்கள் இருப்பிடம், பாதுகாப்பு வசதிகள் குறித்து, ஏ.எஸ்.பி., சிவபிரசாத், ஏ.டி.எஸ்.பி., மாரிராஜனுடன் விவாதித்தார்.

Read More

இன்று 17-02-2020

கொசோவா விடுதலையை அறிவித்தது(2008) விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000) சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது(1867) நியூஸ் வீக், முதலாவது இதழ் வெளிவந்தது(1933) மக்கள் சீன குடியரசுக்கும், வியட்நாமுக்கும் இடையே போர் ஆரம்பமானது(1979)

Read More

கம்பன் கழக அறக்கட்டளை விழாவில்

இன்று மாலையில் நடைபெறும் கம்பன் கழக அறக்கட்டளை விழாவில் விருதுபெறும் நண்பர் வழக்குரைஞர் திரு. Lakshmi Narayanan அவர்களை வாழ்த்துகிறோம்.

Read More