கழுத்தை நெறிக்கும் நிதி நிறுவனங்கள் மூச்சு விட முடியாமல் திணறும் மக்கள்

விருதுநகர்:விருதுநகரில் வாங்கிய கடனை செலுத்த மத்திய அரசு அவகாசம் கொடுத்தம் கழுத்தை நெறிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களால் பொதுமக்கள் திணறுகின்றனர். ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர். எந்த தொழிலும் முழுவீச்சில் செயல்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசால் இ.எம்.ஐ., செலுத்த முதலில் மூன்று தற்போது மூன்று என ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டாம் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடனை செலுத்த நெருக்கடி கொடுக்கின்றன. சில நிறுவனம் டூவீலர்களை பறிப்பதும் தொடர்கிறது. இதனால் அப்பாவி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.கலெக்டர் கண்ணன் : ஊரடங்கு நேரத்தில் நெருக்கடி தருவதை தவிர்க்க வேண்டும். நெருக்கடி தரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் , என்றார்.

Read More

அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் மக்கள்

விருதுநகர்:தெருவிளக்கு, ரோடு, வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் விருதுநகர் கலைஞர் நகர் மக்கள் அவதிப்படுகின்றனர். பாவாலி ஊராட்சிக்கு உட்பட்ட இந்நகரில் அடிப்படை வசதிகள் இல்லை. தெருவிளக்குகள் எரியாததால் இருளிலே தவிக்கின்றனர். வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ரோட்டிலே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.தெரு நாய்கள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாதத்திற்கு இரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேட்டுப்பட்டியில் குடிநீர் உவர்ப்பாக இருப்பதால் உபயோகிக்க முடியவில்லை. தாமிரபரணி குடிநீர் கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.குழாய்கள், குடிநீர் தொட்டகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே குடிநீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க முடியும். ரோடுகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. தரைப்பாலம் ஓட்டை விழுந்து விபத்து ஏற்படுத்துகிறது. போலீஸ் பாலம் அருகே நீர்வரத்து கால்வாயில் புதர்மண்டி கிடக்கிறது. அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.…

Read More

சி.ஐ.டி.யூ., முற்றுகை

விருதுநகர், ஜூன் 1- – ஊரடங்கில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு கொடுத்தும் மார்ச், ஏப்ரலில் ஊதியம் வழங்கவில்லை, தற்போது மே மாத ஊதியத்திற்கு இருப்பில் உள்ள விடுப்பை கழிக்கப்படும் எனவும், விடுப்பு இல்லையென்றால் ஊதிய பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்தது.இதைக் கண்டித்து சி.டி.ஐ.யூ., தொழிற்சங்கம் சார்பில் விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. சம்மேளன தலைவர் வெள்ளதுரை தலைமை வகித்தார். பொதுமேலாளர் சிவலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினர். மண்டல நிர்வாகிகள் சுந்தரராஜன், வேலுச்சாமி கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: அரசு பஸ் பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி வைரமுத்து தலைமை வகித்தார். கிளை மேலாளர் ரவிசந்திரனிடம் சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், ஜான்பிரிட்டோ, ஆழ்வார், ராமசாமி மனு அளித்தனர்.

Read More

மரங்கள் தந்த கொடை… கோடையில் கைகொடுக்கும் நிலத்தடி நீர்…

சுற்றுச்சூழல் மேன்மையடைய மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதே தீர்வாக அமையும். முன்பு கண்மாய், ஊரணி, குளங்களின் கரைகளில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தனர். விளைவு மரங்கள் நன்கு வளர்ந்து நீர் நிலைகளின் கரைகளை பாதுகாப்பதோடு அவற்றில் கிடைக்கும் கனிகளால் ஊராட்சி நிர்வாகத்துக்கும் வருவாய் கிடைக்கிறது.விருதுநகர் அருகே குத்தலப்பட்டி கிராமத்தில் ஊரணியை கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். ஊரணியின் கரைகளில் முன்பு வளர்க்கப்பட்ட புளிய மரங்களை பட்டுப்போகாமல் பாதுகாக்கின்றனர். ஊரணிக்கு மழை நீர் செல்ல வசதியாக கரையில் நிலத்தடி நீர் உறிஞ்சும் சிறு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் நேரடியாக ஊரணியை நிரப்புகிறது.

Read More

பாராகும் நிழற்குடைகள் தேவை போலீஸ் கண்காணிப்பு

விருதுநகர்:விருதுநகர் கிராமப்புற நிழற்குடைகள் குடிமகன்களில் பாராக செயல்படுவதால் பொது மக்கள்பாதிக்கும் நிலையில் இங்கு போலீஸ் கண்காணிப்பு அவசியமாகிறது. கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் நிழற்குடைகளை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதை பயன் படுத்தி குடிமகன்கள் இதை பாராக பயன்படுத்தி வருகின்றனர். இன்று முதல் பஸ் போக்குவரத்து துவங்க உள்ள நிலையில் இதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிறந்த நாள் விழா

#விருதுநகர்_எம்.பி. #மாணிக்கம்_தாகூர் பிறந்த நாளாய் முன்னிட்டு சாத்தூர் மேட்ட மலையில் 100 நாள் வேளை தொழிலாளர்களுக்கு சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு #SV_சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய சேர்மன் திரு நிர்மலா கடற்கரை ராஜ் அவர்கள் இன்று பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள் இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Read More

விளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

விருதுநகர்: கொரோனா விவகாரத்தில் திமுக விளம்பரம் தேடிக்கொள்வதாகவும், தங்களை பொறுத்தவரை வெளியே தெரியாத வகையில் விளம்பரமின்றி உதவிகள் புரிந்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்த அவர், திடீரென திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதனிடையே விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் எடப்பாடியார் தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருவதாக புகழாரம் சூட்டினார். திமுக அரசியல் பட்டியலின மக்களை விமர்சிக்கும் வகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்திற்குரியது என்றும், அதிமுக ஆட்சியில் அனைவரும் சமம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாகுபாட்டை உருவாக்கி திமுக அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார். பொய் தகவல் திமுக எம்.பி.க்கள் தலைமைச் செயலாளரிடம் அளித்த…

Read More

நான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல்  நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட  8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. I. கோயம்புத்துலீர், நீலகிரி,…

Read More