வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுப் பரவியதாகக் கூறிய வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது

Read More

கொரோனா தடுப்பூசி: இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா விருப்பம்! #கொரோனாதடுப்பூசி #இந்தியா #ரஷ்யா

கொரோனா தடுப்பூசி: இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா விருப்பம்! #கொரோனாதடுப்பூசி #இந்தியா #ரஷ்யா

Read More

24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்

டெல்லி: 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது.

Read More

எச் -1 பி விசா.. இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. புதிய தளர்வுகளை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

நியூயார்க்: 2020 வருட இறுதி வரை H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை தடை செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதில் முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள் ஆகிய இரண்டையும் வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்து கடந்த ஜூன் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்துள்ளது. அமெரிக்கர்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதனால் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று டிரம்ப் கூறினார். இந்தியா எப்படி இதனால் அமெரிக்க செல்லும் கனவில் இருந்த இந்தியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளார்கள். அமெரிக்காவில்…

Read More

சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டம் – “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், “எங்கள் சிங்கப்பூர்” என்ற பாடல், சிங்கப்பூரின் தேசிய தினமாகிய இன்று வெளியிடப்பட்டது. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் எழுதிய இப்பாடலுக்கு, சிங்கப்பூர் இசைக்கலைஞர் பாடகர் “இசை மணி” பரசு கல்யாண் இசையமைத்து காணொளியாக உருவாக்கியிருக்கிறார். சிங்கப்பூர் வாழ் இசைக்கலைஞர்களாகிய அருண் பிரசாத், தீபக் ஐயர், கார்த்திக் மகாதேவன், மாதவன் குணா, ம்ரினல் நாராயன், மைத்ரயி வாசுதேவன், மதியழகன், பிரசாந்தி சந்தானம், ரவின் ராஜ், சேது, சோபனா ராச்சேல், சுமா பாலகிருஷ்ணா, விநாயா ராஜகோபால் மற்றும் பரசு கல்யாண் உள்ளிட்ட 14 பாடகர்கள் முதன்முறையாக இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்,…

Read More

இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பிற்பகலில்தான் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகின. தொடக்கம் முதலே மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனாதான் முன்னணியில் இருந்தது. கடைசி முடிவுகளின்படி மொத்தம் 145 இடங்களை ராஜபக்சே கட்சி கைப்பற்றி உள்ளது.இதனிடையே ராஜபக்சே கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையிலேயே அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.

Read More