சமத்துவ பொங்கல் விழா

சிவகாசி யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. முத்துலட்சுமி விவேகன்ராஜ் மற்றும் ஒன்றிய துணை தலைவர் விவேகன்ராஜ் அவர்களின் தலைமையில் கொண்டாடிய போது

Read More

சிவகாசியில் தொடர் மழையால் பொங்கல் விற்பனை மந்தம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.சிவகாசியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

சதுரகிரியில் மழை: பக்தர்களுக்கு தடை

வத்திராயிருப்பு:மார்கழி அமாவாசையையொட்டி ஜன.10 முதல் 4 நாள் சதுரகிரி கோயில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று காலை 6:45 மணி முதல் பக்தர்கள் மலையேறினர். தொடர் மழையால் ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் காலை 11:30 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் செய்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் உடனடியாக அடிவாரத்திற்கு திரும்பினர். வழக்கம்போல் கோயிலில் அமாவாசை வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல்அலுவலர் விஸ்வநாதன் செய்து இருந்தனர்.

Read More

அனைவருக்கும் என் இனிய #பொங்கல்_நல்_வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் என் இனிய #பொங்கல்_நல்_வாழ்த்துக்கள்.. தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள். அனைவருக்கும் என் இனிய #பொங்கல்_நல்_வாழ்த்துக்கள்.. இவண்: கோஸ்குண்டு சாத்தூர் திரு.S.V.சீனிவாசன் B.Com அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி #DMK #திமுக #Sattur_DMk #DMK_Sattur www.svssattur.in

Read More

கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

திருவில்லிபுத்தூரில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாயை திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திருவில்லிபுத்தூர் சந்தை கிணற்று தெரு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் குறைந்தளவு தண்ணீர் உள்ளது. இந்நிலையில் இந்த கிணற்றுக்குள் நாய் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் நாய் தொடர்ந்து ஊளையிட்டு கொண்டிருந்தது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த நாயை கயிறு கட்டி மீட்டனர்.

Read More

விருதுநகர் ஆசிரியை வீட்டில் 60 பவுன் மாயம்

விருதுநகர் பி.பி.வையாபுரி தெருவை சேர்ந்தவர் சுதாதேவி(41), இவர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியில் உள்ளார். கணவரை பிரிந்து மகன் ஐஸ்வர்ராஜா(18) உடன் வசித்து வருகிறார். வீட்டு பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகையை கடந்த டிச.13ம் தேதி பார்த்துள்ளார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த இவரின் தோழி கண்ணகி ரூ.2லட்சம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை, நகையை அடமானம் வைத்து தருவதாக தெரிவித்துள்ளார். நகையை அடகு வைப்பதற்காக நேற்று பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை. இது தொடர்பாக மேற்கு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் மோப்பநாய், கைரேகை பிரிவு அலுவலர்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Read More

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினி முடிவு செய்ய வேண்டும்- நடிகை கவுதமி

பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் “நம்ம ஊரு பொங்கல்” நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு “நம்ம ஊரு பொங்கல்” நடைபெற்றது. பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கூட்டணி என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தற்போது கருத்துக்கள் இல்லை. யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு கிடையாது. தேர்தல் வரை…

Read More

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட கலெக்டர் தகவல்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் கால்களில் முழுமையாக வலுவில்லாத, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். கால்களில் முழுமையாக வலுஇல்லாத முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டுகிறேன். இவ்வாறு…

Read More

Virudhunagar District Police News 11-01-2020

விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி NSS மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, சாலை பாதுகாப்பு குறித்த மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Read More

சேத்தூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது

சேத்தூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (வயது55), சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (27) ஆகியோர்களுக்கு சொந்தமான 3 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுபற்றி அவர்கள் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் நடத்திய விசாரணையில் சேத்தூர் கந்தசாமி (21), முகவூர் அருண்குமார் (22), பாலமுருகன் (20) உள்பட 5 பேர் சேர்ந்து இந்த மூன்று இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. பின்னர் நேற்று காலை போலீசார் இவர்களிடம் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து இவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Read More