Awareness of ignorance

சிந்தனையை மாற்றுங்க மாஸ்க் அணிந்தால் கொரோனா வராது நினைப்பில் வலம் அறியாமையால் வெளியே சுற்றுபவர்களால் நோய் தொற்று விருதுநகர்:மாஸ்க் அணிந்தால் கொரோனா வராது என்பது போல் நினைத்து அறியாமையால் விருதுநகர் மாவட்டத்தில் ஊர் சுற்றும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. 14 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த ராஜபாளையம் முதியவர் வசித்த பகுதி தடை செய்யப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், பிற விஷயங்களுக்காக நடமாடுவது அதிகரித்துள்ளது. முதியவர்கள் சிலர் காலை வேளைகளில் ஒன்று கூடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். 10 வயது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தாக்கும் அபாயம் இருந்தும் வெளியே நடமாடுகின்றனர். மாஸ்க் அணிந்து சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படாது…

Read More