சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் : விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் ஆதிசக்தி அன்னை ஸ்ரீமாசாணி அம்மன்தியான பீடம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு 16 அபிேஷகம் செய்து நோய் நொடியிலிருந்து மக்களை காப்பாற்ற அம்மனிடம் வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை பூஜாரிகள் நடத்தினர்.சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு இந்திரா நகர் ஜடா முனீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.சிவகாசி சாட்சியாபுரம் தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில், ஆட்டோ ஸ்டாண்டு துர்கை பரமேஸ்வரி, பேச்சியம்மன், சிவன் கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன், திருத்தங்கல் சக்தி மாரியம்மன், கருநெல்லிநாதர் உள்ளிட்ட கோயில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.

Read More

கோயில் அருகே டாஸ்மாக்; ஆக்கிரமிப்பு; சிரமத்தில் சிவன் கோயில் மாட வீதி மக்கள்

சிவகாசி : ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பக்தர்கள், கோயில் அருகே டாஸ்மாக்,வணிக வளாகத்தில் செயல்படாத சுகாதார வளாகம் என சிவகாசி சிவன் கோயில் மாட வீதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். சிவன் கோயிலை சுற்றிலும் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இங்கு கோயில் மாட வீதி, குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை துார்வாரவில்லை. குப்பையால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது.சில இடங்களில் சாக்கடை துார்வாரப்பட்டும் கழிவுகள் அங்கேயே போடப்படுவதால் மீண்டும் சாக்கடையிலே குப்பை விழுகிறது. கோயில் முன்புறம் கடைகள், டூவீலர்களின் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

Read More

கபசுர குடிநீர் பந்தல் திறப்பு

சாத்துார் : முக்குராந்தலில் கபசுர குடிநீர் பந்தலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், கபசுர குடிநீர், வாட்டர் பாட்டில் வழங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, நகர செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.

Read More

சரிசெய்யுங்க! டவர் இருந்தும் கிடைக்காத அலைபேசி சிக்னல்

சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் போதிய நவர் இருந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காத வாடிக்கையாளர்கள், கிடைக்கும் பகதிகளை நோக்கி செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் . இங்குதான் பெருமபாலான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரிபவர்கள் பலரும் நகர் பகுதியில் இருந்தே வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்கு தனியார், பி.எஸ்.என்.எல்., அலைபேசி சிம்களை பயன்படுத்துகின்றனர். நகர் பகுதிகளில் மட்டுமே அலைபேசி சிக்னல் கிடைக்கின்ற நிலையில் கிராமப்பகுதிகளுக்கு சென்று விட்டாள் சிக்னல் கிடைக்காமல் பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர் . தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் இல்லையேல் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற பதிலையே கேட்கமுடிகிறது. பல கிராமங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்து பேசும் நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அவசர தேவைக்கு சிக்னலை தேடி அலையும் நிலையும் உள்ளது. வத்திராயிருப்பு , முதலிப்பட்டி இருக்கன்குடி,…

Read More

சதுரகிரியில்3 நாள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்:’சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம், பவுர் ணமியை முன்னிட்டு 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.ஏப்.24ல் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.ஏப்.25 அன்று ஊரடங்கால் அனுமதியில்லை. ஏப்.26ல் பவுர்ணமியை முன்னிட்டு காலை 7:00 மணி முதல் 12:00, ஏப்.27ல் காலை 10:00மணி வரை மட்டுமே அனுமதி. இரவு தங்க அனுமதி கிடையாது, என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Read More

விருதுநகர் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள்; கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்

விருதுநகர் : விருதுநகர் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் ஓட்டும் எண்ணும் பணிக்கு போடவுள்ளதாகவும், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் எனவும் கலெக்டர் கண்ணன் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு:விருதுநகர் மாவட்ட ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையின்போது முகவர்கள் பென்சில், பேனா, காகிதம், 17 சி படிவம், ரப்பர் ஆகியவை மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லை எனும் சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். கொரோனா உறுதியானால் 24 மணி நேரத்திற்கு முன்பே மாற்று முகவர்களை தேர்வு செய்து தேர்தல் அலுவலரிடம் அடையாள அட்டை பெற வேண்டும். இதற்கு தயாராக ஒவ்வொரு தொகுதியிலும் அனுமதிக்கப்பட்ட முகவர்களுடன் கூடுதலாக 25 சதவீதம் முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Read More

பூமித்தாயின் மூச்சை அடைக்கும் பாலிதீன்! இன்று உலக பூமி தினம்

விருதுநகர் : பூமியானது மனிதர்கள் உட்பட பல கோடி உயிரினங்களின் உணவு, உறைவிடத்தை உறுதி செய்யும் பெரும் இயற்கை. மனிதன் பல தீமை செய்தும் அதை பொறுத்து மீண்டும் மீளும் வகையில் தான் பூமியும் கடவுளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை காக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப். 22ல் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருபொருள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கும் அபாயம் உள்ளது. இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழ முடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். அவர்கள் பூமியின் எதிர்காலத்தை…

Read More

விழாக்கள் தடையால் நாட்டுப்புற கலைஞர்கள் பரிதவிப்பு!

சாத்துார், ஏப். 20 -கொரோனா பரவல் தடுக்கும் விதமாக கோயில் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நாடக, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கோயில் திருவிழாக்களில் கரகம் ஒயிலாட்டம், தெம்மாங்கு , சரித்திரநாடகங்கள் நடத்தப்படும். இதன் மூலம் நாடகநடிகர்கள், நாட்டு புறகலைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இதோடு நாதஸ்வரகலைஞர்கள், தாரை தப்பட்டை வாத்தியக் குழுவினரும் பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது கொரோனா பரவலால் விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளதால், இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. மாற்று தொழில் தெரியாத இவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கரகம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதேபோன்று இவர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு…

Read More

5 ஏக்கரில் அரசு பல் மருத்துவ கல்லூரி; நிலம் ஆர்ஜிதம் செய்து அறிவிப்பு பலகை வைப்பு

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைய உள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரி கட்டுமானத்துக்காக, 5 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு நில ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இப்பகுதியில் ரூ.185 கோடி மதிப்பீட்டில் மருத்துவகல்லுாரி கட்டுமான பணிகள் நடந்து வருகிது.இதன் பணிகளை ஜூலைக்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. 2021- – 22 ம் கல்வியாண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கான முதலாம் ஆண்டு அட்மிஷன் ஆகஸ்டில் துவங்க உள்ளது.இந்நிலையில் இங்கு தமிழகத்தின் இரண்டாவது அரசு பல் மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும் என 2015ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான கட்டுமான பணிக்காக முதற்கட்டமாக ரூ.50 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கினார்.எனினும் நில ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல் நீடித்தது. தற்போது இப்பணியும் முடிக்கப்பட்டு, நில ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு பலகையும்…

Read More

உயிரினங்களை வாட்டும் கோடை வெயில்

விருதுநகர் : விருதுநகரில் வாட்டும் கோடையால் குரங்கு போன்ற உயிரினங்களை தண்ணீர் தேடி நகருக்குள் வந்து செல்கின்றன. மனித வளர்ச்சியின் அபாரத்தால் காடுகளை யொட்டி வீடுகள் கட்டப்பட்டதால் குடியிருப்புகளுக்குள் யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் புகுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு முறை சிறுத்தை வந்து சென்றது. காரியாபட்டி மாந்தோப்பு பகுதியில் குரங்குகள் வந்து செல்லும். தற்போது வாட்டி வரும் கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்லாது பிற உயிரினங்களையும் கிறுகிறுங்க செய்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஆங்காங்கே குரங்குகள் தண்ணீர் தேடி நகருக்குள் சுற்றி திரிந்தன. குரங்கு என்பதால் மக்கள் பெரிய அளவில் அச்சுறுத்தல் அடையவில்லை. இந்நிலையில் அவற்றின் தேவை அறிந்த மனிதநேயமிக்க சிலர் குரங்குகளுக்கு உணவளித்து குடிநீர் வைத்தனர். சில குரங்குகள் வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தன.…

Read More