நகராட்சியில் தொடரும் முறைகேடுகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

விருதுநகர்:விருதுநகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எதையும் கண்டுக்காத வேடிக்கை பார்ப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக நகராட்சிகளில் அவசர கூட்டம், சாதாரண கூட்டம், வேண்டுகோள் கூட்டம் நடத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். தற்போது கவுன்சிலர்கள் இல்லாததால் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஒரு வெளிப்படை தன்மை இருப்பதில்லை. ரகசியமாக நடக்கும் இந்த தீர்மானங்களால் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

30வது வார்டு பி.பி.,வையாபுரி நந்தவனம் தெருவில் நகராட்சியின் சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது. கட்டடம் சேதமடைய துவங்கியதும் நகராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை இடித்தது. அப்பகுதியினர் ரேஷன் கடை அமைக்கும்படி கோரினர் இதற்கு எம்.பி.,மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அந்த காலியிடத்தை தனிநபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. முறைப்படி டெண்டர் அறிவிக்காமல் குத்தகை நடந்துள்ளது.இதையடுத்து கடந்த வாரம் அந்த காலியிடத்தில் தனிநபர் வீடு கட்ட வானம் தோண்ட ஆரம்பித்தனர். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தும் பணிகள் தொடர்ந்தன. நகராட்சி அமைப்புகளின் இயக்குனரகத்திற்கு புகார் சென்றவுடன் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே காலியிடங்களை குத்தகைக்கு விட நகராட்சி நிர்வாகம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பி.பி. வையாபுரி நந்தவனம் தெரு காலியிடமும் அடங்கும். இதற்கு உயர் அதிகாரிகள் முதல் ஆளும் கட்சியினர் வரை உடைந்தையாக உள்ளதாகவும்,இதை மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related posts

Leave a Comment