கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் – சவுரவ் கங்குலி

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தா: கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்டும் அடக்கம். இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என செயலி ஒன்றின் மூலம் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் திடீரென உலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். நம்மிடம் இந்த வைரசுக்கு மருந்து எதுவும் இல்லை. ஆனால், 6 அல்லது 7 மாதங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு…

Read More

தாயகம் திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்

ஜெர்மனியில் 3 மாதங்களாக தவித்த உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தாயகம் திரும்பினார். பெங்களூரு: செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவரும், சென்னையைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், பன்டெஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றார். போட்டியை முடித்துக் கொண்டு மார்ச்சில் அவர் தாயகம் திரும்ப வேண்டியது. அதற்குள் கொரோனா வைரசின் ருத்ரதாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால் 3 மாதங்கள் அங்கு தவித்தார். ஆன்லைன் செஸ் போட்டியில் பங்கேற்பு, வர்ணனையாளர் பணி, சமூக வலைதளங்கள் மூலம் வீரர்களுடன் கலந்துரையாடல் என்று நேரத்தை செலவிட்டார். தற்போது பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக நேற்று இந்தியாவுக்கு திரும்பினார். ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக பெங்களூருவுக்கு நேற்று பிற்பகல்…

Read More

நான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல்  நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட  8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. I. கோயம்புத்துலீர், நீலகிரி,…

Read More

காலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா?

முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்னால் செய்யப்படுவது. வெறுவயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது மற்றும் இது காலை உணவிற்கு பிறகும், மத்திய உணவிற்கு பிறகும் செய்வதை விட மிகவும் ஏற்றது. காலை காற்று மிகவும் புத்துணர்ச்சி ஊட்ட கூடியது. இதில் ஆக்சிஜன் மற்ற நேரத்தை விட அதிகமாக உள்ளது. சூரியகதிரும் ஒரு நாளில் இருக்கும் மற்ற நேரத்தை விட காலையில் மிகவும் வைட்டமின் சத்துக்களை தருகிறது காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைப்பாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம்…

Read More

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர்.…

Read More

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆகிறது

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா தேர்ந்து எடுக்கப்படுகிறது. நியூயார்க்: அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில், 10 நாடுகள் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர்களாக இடம்பெறுகின்றன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் 5 இடங்களுக்கு உறுப்பு நாடுகளை தேர்ந்து எடுக்க ஆண்டுதோறும்தேர்தல்நடைபெறும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா ஏற்கனவே 7 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்று உள்ளது. கடைசியாக 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் உறுப்பினராக இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக இந்தியா நீண்ட காலமாக முயற்சி…

Read More

திருச்சி அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

திருச்சி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் பூவாங்குடி: திருச்சி பூவாங்குடி காலனியில் வசித்து வருபவர் ஆசிரியை கௌரி.  ஆசிரியை கௌரிக்கு இரண்டு மகள்கள் மற்றும்  ஒரு மகன்  உள்ளனர்.  இந்நிலையில் ஆசிரியை கௌரி மற்றும் மகன், மகள்கள் வீட்டில் வசித்து வந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆசிரியை கௌரி, இரண்டு மகள்கள் மற்றும்  ஒரு மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் நவல்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பூவாங்குடி காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

Read More

இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி

பொருளாதாரத்தின் மிகப்பெரிய பகுதி திறக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான மிகப்பெரிய பகுதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என பிரதமர் மோடி தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில் ‘‘நான் கடந்த முறை பேசியபோது பயணிகள், விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தொழில்துறையும் மிகப்பெரிய அளவில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நாம் அஜாக்கிரதையாக…

Read More

SIVAKASI AMMK NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளைBA அண்ணன் அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் பகுதிகளில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் KS.போஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஆலங்குளம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் தாமோதரன், சாத்தூர் நகர செயலாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமிகிருஷ்ணசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதாதனசேகரன் ,து.துர்க்கைபாண்டியன், PG.அழகுராஜா, கிருஷ்ணகண்ணன், வேல்சாமி, K.பழனிசெல்வம், LIC கருப்பசாமி, V.வேல்முருகன், தங்கராஜ், பாண்டி, கோவிலூர் M.கணேஷன், செல்வம், முத்துமணிகண்டன்,…

Read More

Sivakasi Blood Donation Camp

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாமை நிறுவனர் J.கோபி, ஒருங்கிணைப்பாளர் M.முத்துக்குமார், தலைவர் M.கருப்பபசாமிபாண்டியன், துணைத்தலைவர் B.பாலமுருகன், செயலாளர் S.கார்த்திக்போஸ், பொருளாளர் N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்நிகழ்வில் உடன் மாவட்ட மகளிரணி செயலாளர் D.கவிதாதனசேகரன் ,PG.அழகுராஜா, மு.முருகானந்தம், சொர்ணயாபாண்டியன், G.P.வைகுண்டமூர்த்தி, முருகேசன், வெள்ளைப்பாண்டி, கிருஷ்ணசாமி, R.தங்கராஜ், S.ராஜா, கிருஷ்ணசாமி, சாமிநத்தம் M.தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன், முனியசாமி, முத்துமகேஸ்வரன், த.முருகானந்தம், வீரபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More