குடம் ரூ.10 குடிநீர் ரூ.18 ஆனது

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் குடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தினர் குடம் ரூ.10க்கு விற்ற குடிநீரை 18 க்கு விற்கின்றனர்.

அருப்புக்கோட்டையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது .25 நாட்கள் ஆனாலும் வருவது இல்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். ஊரடங்கால் வெளியில் செல்ல

முடியாத நிலையில் ஒருசில தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் குடம்

ரூ.10 நீரை 15 முதல் 18 வரை விற்கின்றனர். மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மினரல் வாட்டர் எந்தளவிற்கு சுத்திகரிக்கப்பட்டு உள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு தரம் உள்ளதா போன்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர். கண்காணிக்க

வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.இனியாவது இதை கண்காணிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment