கிரிக்கெட்டுங்கறது ஒரு விளையாட்டு தாங்க… அதவிட மனுஷங்களோட பாதுகாப்பு முக்கியம்

லண்டன் : கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமே, அதையும் மீறி வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கொள்ளவுள்ள தொடரை ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் யோசனை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் கிரிக்கெட்டை நடத்த வேண்டிய தேவை எற்பட்டால் அதை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும், தற்போது கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். காலி மைதானங்களில் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளை காலி மைதானங்களில் நடத்துவதற்கு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள தொடரை காலி மைதானங்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து…

Read More

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.. 20 வருஷமாகிடுச்சு.. இன்னும் அந்த மேஜிக் மறையல.. ரஹ்மான் ட்வீட்!

சென்னை: இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் தல அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், தபு நடிப்பில் வெளியான படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். கடந்த 2000ம் ஆண்டு மே 4ம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது. நேற்றுடன் 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்திற்கு ரம்மியமான பாடல்களை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், ராஜீவ் மேனனின் இன்ஸ்டா பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நடிகர் அஜித்துக்கு இந்த படத்தில் தபு ஜோடி என்றாலும், அப்பாஸை காதலித்து, அந்த காதலில் தோற்று, கால் இழந்த குடிகார மேஜரான மம்முட்டியை கரம் பிடிக்கும் நடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் கதையின் நாயகியாக கலக்கி இருப்பார். கண்ணா மூச்சி ஏனடா? பாடலில் அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இசைப்புயல் கண்டு கொண்டேன் கண்டு…

Read More

நாடு முழுக்க சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து.. வகுப்பு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி

டெல்லி: நாடு முழுக்க பத்தாம் வகுப்பு (CBSE 10th board exams) சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதியிலேயே தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் இந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவை ரத்து செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கலவரம் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த வட கிழக்கு டெல்லி பகுதியில் மட்டும் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்கள் முன்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளித் தேர்வின்போது எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை…

Read More

Mukkulathor Pullipadai

முக்குலத்தோர் புலிப்படை எங்கள் பாசத்தலைவர்,வீரத்தமிழர், அண்ணன் சேது கருணாஸ் தேவர் MLA அவர்கள் ஆணைக்கிணங்க * மாநில துணை தலைவர் திரு.ஈஸ்வரன், மாவட்ட பொறுப்பாளர் திரு.ராஜ்குமார்* அவர்களின் ஆலோசனைப்படி பழனி நகர செயலாளர் பசும்பொன் நாகராஜ் *மாவட்ட இளைஞரணி செயலாளர் மஞ்சுநாதன், ஒன்றிய தலைவர் கருப்புசாமி, நகர இளைஞரணி செயலாளர் சுதாகர், ஒன்றிய இளைஞரணி தலைவர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் விக்னேஷ்* மற்றும் இளைஞர்கள் ஒன்றினைந்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பழனியில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பெண்களுக்கு மத்திய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது

Read More

M. K. Stalin

#CoronaVirus காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து தேர்வு எழுதுவார்கள்? ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் #NEET-ஐ தமிழக அரசு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்.

Read More

Actor Vijay Sethupathi

பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!! நடிகர் விஜய் சேதுபதி ட்வீட்! #ActorVijaySethupathi | #Hungry | #Lockdown3

Read More

Breaking News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு * தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரிப்பு * சென்னையில் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு * சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது * புதிதாக இன்று 2 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு * இன்று கொரோனா பாதித்தவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள்#COVID19 | #TNCoronaUpdate

Read More

Kkssr Ramachandran MLA

இன்று அருப்புக்கோட்டையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய தொழில்களாக இருக்கும் கைத்தறி. விசைத்தறி. பவா்லும். சாயப்பட்டறை மற்றும் பஜார் கடைகளில் பிரதிநிதிகளை அழைத்து 06-05-2020-தேதிக்கு பிறகு எவ்வாறு செயல்பட போகிறோம்? அரசாங்கம் பிறப்பித்துள்ள தளா்வுகளால் நம் தொழிலுக்கு என்னென்ன சாதக. பாதகங்கள் உள்ளன? சட்டமன்ற உறுப்பினா் என்ற முறையில் அவா்களுக்கு என்னென்ன உதவியும் செய்யவேண்டும் என்று விரிவாக கலந்துரையாடினேன்.

Read More

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read More