அந்த மனசுதான் வேணும்.. தானாக முன்வந்து சம்பளத்தை குறைத்த விஜய்ஆண்டனி.. பாராட்டும் தயாரிப்பாளர்கள்!

சென்னை: பிரபல ஹீரோ, தானாக முன் வந்து தனது சம்பளத்தை குறைத்ததை அடுத்து அவரை தயாரிப்பாளர்கள் பாராட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்

குறைக்க வேண்டும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காததால், தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் டாப் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் பாதியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழ் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த கோரிக்கையை வைத்த நிலையில், கேரள, தெலுங்கு சினிமா துறையிலும் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஹீரோ விஜய் ஆண்டனி, தானாக முன் வந்து தனது சம்பளத்தில் 25 சதவிகித்தை குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளார். விஜய் ஆண்டனி, இப்போது, பெப்சி சிவா தயாரிப்பில், ‘தமிழரசன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அக்னி சிறகுகள் இதையடுத்து, அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும், ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை நவீன் இயக்குனர். அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன் உட்பட பலர் இதில் நடித்து வருகின்றனர். கஜகஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இதையடுத்து ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிக்கும் ‘காக்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Related posts

Leave a Comment