விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால்துறை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய கால அவகாசம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஜூன் மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. விருதுநகர்: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஜூன் மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. தபால்துறையில் அமலில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை விட கூடுதல் வட்டி தரப்படுவதால் பணி ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முன்னுரிமை தரும் நிலை இருந்து வருகிறது. தற்போது ரிசர்வ் வங்கி சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்துவிட்ட போதிலும் தபால்துறை இத்திட்டத்தின் கீழ் 7.4 சதவீதம் வட்டி வழங்கி வருகிறது. இந்தநிலையில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட…

Read More

மாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு

4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், மாநில முதல்-அமைச்சர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியுள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற செய்தி உலா வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பில்லை. மற்ற இடங்களுக்கு இன்னும் தளர்வு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்ற நிலையில், மத்திய உள்துறை மத்திரி அமித் ஷா இன்று அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பேசியுள்ளார்.அப்போது ஊரடங்கு உத்தரவு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் என்று அமித் ஷா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் தொற்று தகவல் குறித்து அறிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது. 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக 10,548 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம்.பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்பட தேவையில்லை. சென்னையில் மட்டும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விஜய பாஸ்கர் பேசினார்.

Read More

Sv Srinivasan Sattur Biodata

பெயர் : எஸ்.வி.சீனிவாசன் திமுக (வயது 41)சொந்த ஊர் : கோசுகுண்டு இருப்பிடம் : பந்தல்குடி படிப்பு :  B.com., பெற்றோர் : வேலுச்சாமி தேவர்- லட்சுமி அம்மாள் மனைவி : மாரியம்மாள்    மகள்கள் : சந்தியா, சரண்யா கடந்த 2004ம் ஆண்டு திமுக வில் இணைந்த இவர்   தற்பொழுது வரை கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4427 வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்த இவர் மீண்டும் இதே தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 452 வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வி website link http://svssattur.in/

Read More

Sattur Dmk

#👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, 👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, 👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை, 👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை. 👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை, 👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, 👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும், 👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும், 👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம…

Read More

Virudhunagar MLA

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் சத்திரரெட்டியாபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் 45 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணி மற்றும் மந்தையிலிருந்து காமராஜர் காலணி வரை நடைபெற்று வரும் 50 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மருது.

Read More

Virudhunagar District Police

மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காரியாபட்டி சரக காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில், காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.வினோத்குமார், திரு.தமிழழகன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முருகன் ஆகியோர் அன்னை தெரசா நற்பணி மன்றம் மற்றும் காவல் நண்பர்கள் குழுவினருடன் இணைந்து காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகளை நட்டனர்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுபக்குமார் அவர்கள் தலைமையில் சாத்தூர் டவுண் காவல்துறையினர் மற்றும் சாத்தூர் டவுண் போக்குவரத்து காவல்துறையினருடன் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.திருப்பதி அவர்கள் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, சாத்தூர் நகர் பகுதிகளில் உள்ள வணிக மற்றும் வியாபார கடைகளில் 144 தடை உத்தரவை மதித்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கும் கடை உரிமையாளர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Sattur Kkssr Ramachandran

இன்று காலை சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போத்திரெட்டிபட்டி கிராமத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டேன் பிரச்சினைக்கு உடனடியாக இன்று மாலையே தீர்வு காணப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்…

Read More