ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு

ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் நடுவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள். போட்டிகளில் அவர்களது செயல்பாடு நன்றாக இருந்தால் அந்த பொறுப்பில் தொடர முடியும். திருப்திகரமாக இல்லையெனில் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்படுவார்கள். வரும் சீசனுக்கான (2020-21) ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜெல் லாங் ஐ.சி.சி. நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நிதின் மேனனுக்கு இடம் கிடைத்து இருக்கிறது. ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர்…

Read More

பண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்

பிரபல தமிழ் பட நடிகரான ஜீவா நடித்துள்ள பாலிவுட் படம் பண்டிகை தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. கபீர்கான் இயக்கியுள்ள இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. இப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய…

Read More

கொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை

கொரோனாவில் இருந்து வயதானவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை தேவயானி வற்புறுத்தி உள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா கஷ்ட காலத்தில் அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். விதவிதமாக சமைத்து போடுகிறேன். தோட்ட வேலைகள் செய்கிறேன். வெளியே எங்கேயும் போவது இல்லை.  கட்டில் படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ் பாபு இயக்கிய அரசின் கொரொனா விழிப்புணர்வு படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் நடித்துள்ளேன். இந்த விழிப்புணர்வு படம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும். அது உயிர்கவசம். கபசூர குடிநீர் குடியுங்கள். சமூக விலகல் வேண்டும். கைகுலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள். இதைத்தான் பாடல் மூலம் விழிப்பணர்வு படத்தில் சொல்லி இருக்கிறேன்.   வயதானவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், குழந்தைகள்…

Read More

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. புதுடெல்லி:கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக…

Read More

இன்றைய மக்கள் நலப்பணி 30-06-2020

விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான… ✌️மண்ணின்மைந்தன்✌️ மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி… அவர்கள்… இன்று சிவகாசி சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆனையூர் பஞ்சாயத்து அய்யன்பட்டியில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியபோது.. அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில் #ஆனையூர்_முதல்_நிலை_ஊராட்சி_மன்ற #தலைவர் #லயன்வீ. #கருப்பு #லட்சுமிநாராயணன்

Read More

அறிவித்தும் வராத மினரல் வாட்டர் பிளான்ட்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட மினரல் வாட்டர் பிளான்ட் திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கிறது. கடந்த 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் உள்ளாட்சி அமைப்புகளில் பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு வார்டு தோறும் மினரல் வாட்டர் பிளான்ட்கள் அமைத்து 20 லிட்டர் குடிநீர் ரூ.7 க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கபட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளிலும் பிளாண்ட் அமைக்க முடிவு செய்யபட்டு முதல்கட்டமாக ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் செல்லும் பாதை , பெரியமாரியம்மன் கோயில் மேற்கு பகுதியில் அமைக்கபட்டது. ஆண்டாள் கோயில் ரோட்டில் உள்ள பிளான்ட் செயல்பாட்டில் உள்ளது. பெரியமாரியம்மன் கோயில் மேற்கு பகுதி பிளான்ட் மின் இணைப்பு கொடுக்காததால் செயல்பாட்டிற்கு வரவில்லை.பல…

Read More

குடிநீர் தொட்டி, ரேஷன் கடைக்கு அடிக்கல்

சிவகாசி : சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி பள்ளப்பட்டியில் ரேஷன்கடை, முத்து ராமலிங்கம் காலனி, விவேகானந்தர் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, லிங்கபுரம் காலனி மீனாட்சி காலனி பகுதியில் சுகாதார வளாகம், எம்.ஜி.ஆர்., காலனி, காமராஜர் காலனி, மீரா காலனி பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி பணியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். விவேகானந்தர் காலனியில் பேவர் பிளாக் ரோடு, தில்லை நகரில் மின்கல வாகனம் நிறுத்தம் இடத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் கண்ணன், சப் கலெக்டர் தினேஷ்குமார், ஊராட்சி தலைவர் உசிலை செல்வம், நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் சுபாஷினி, பி.டி.ஓ., க்கள் ராமமூர்த்தி, ரவி, ஊராட்சி செயலர் லட்சுமணபெருமாள்சாமி கலந்து கொண்டனர்.

Read More

மரத்தை வெட்ட டெண்டர்; இயற்கை ஆர்வலர்கள் கொதிப்பு

விருதுநகர் : விருதுநகர் சிவகாசி ரோட்டில் எந்த பாதிப்பின்றி உள்ள புளிய மரத்தை வெட்ட தனியார் பெட்ரோல் பங்கிற்காக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வனத்துறை மதிப்பீடு செய்துள்ள நிலையில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.,கூடுதல் பொறுப்பு வகிக்கும் சிவகாசி சப் கலெக்டர் தினேஷ் அனுமதி அளித்து உள்ளார். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறு இல்லாத மரத்தை வெட்ட இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 8 மாதங்களுக்கு முன்பு இதே ரோடு விரிவாக்கம் போது கூட வெட்டாத மரத்தை தற்போது வெட்டுவது ஏன் என கோள்வி எழுந்துள்ளது.

Read More

தலைவலியை நீக்கும் கனகாம்பரம் பூ

அருப்புக்கோட்டை : தலைவலியை தீர்க்கும் குணம் கொண்ட கனகாம்பரம் பூ விவசாயத்தை அருப்புக்கோட்டை பகுதியான கோணப்பநேந்தல், தமிழ்பாடி, பிள்ளயைார் தொட்டியான்குளம், சித்த லகுண்டு உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமாக செய்து வருகின்றனர் விவசாயிகள். இப்பகுதி செம்மண் பூமியாக இருப்பதால் கனகாம்பர பூ க்களுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த பூக்கள் விளைய நிழலான பகுதியே தேவை. இதனால் இதன் ஊடுபயிராக அகத்தி கீரையை பயிரிடுகின்றனர். மரமாக வந்த உடன் இதன் நிழலை பன்படுத்தி கனகாம்பரம் விதைகளை பயிரிடுவர். இவை ஆண்டு தோறும் விளைய கூடியது. குறுஞ்செடி வகையான இது தென்னிந்தியா, இலங்கை, மலேசியா பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இளஞ்சிவப்பு, காவி கலரில் பூக்கும்இதை தலையில் சூடுவதால் தலைவலி, ஒற்றை தலைவலி பறந்து போய் விடும்.கனகாம்பரத்தை மாலையாக அணியும் போது உடலும் பலம் பெறுவதோடு ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாலைகளில் பிற…

Read More