யானைகளால் மாந்தோப்பு சேதம்

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே மாந்தோப்புகளில் யானைகள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தியது.

மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள கான்சாபுரம், அத்திகோயில் பகுதியில் மாந்தோப்புகள் உள்ளன. இங்கு சில நாட்களாக யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. விநாயகமூர்த்தி என்பவரது மாந்தோப்பில் யானைகள் புகுந்து மரங்களை முறித்து சேதப் படுத்தியது. மாங்காய்களும் கீழே விழுந்தன.விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை வனத்திற்குள் விரட்டவும், இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டம் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Related posts

Leave a Comment