ஒரே நாளில் ரூ.3,200 கோடி கடன்: நிர்மலா சீத்தாராமன்

புதுடில்லி : ”பொதுத் துறை வங்கிகள், நேற்று ஒரே நாளில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 3,200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர், ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனங்கள், எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஒரே நாளில், 3,200 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளன.
இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு இக்கடன் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், அந்நிறுவனங்கள், தொழிலாளர்களின் ஊதியம், வாடகை, மூலப் பொருட்கள் செலவினம் உள்ளிட்ட நடைமுறை மூலதனத் தேவைகளை சமாளிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment