கேள்விக்குறியான சுகாதாரம்

சிவகாசி:சிவகாசியில் மழை நீர் செல்லும் ஓடைகள் துார்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இங்கு என்.ஆர்.கே. ரோடு, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், ஜக்கம்மாள் கோயில், அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் செல்லும் ஓடைகள் உள்ளது. இவற்றை துார் வாரி பல ஆண்டுகள் கடந்து விட்டன.குப்பையை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு வீடுகளில் கழிவு நீர் புகுந்து விடுகிறது. ஓடையை துார் வாரி மழை நீர் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment