தோனிக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை தற்போதே அறிவித்த சுரேஷ் ரெய்னா! ரசிகர்கள் பெருங்கவலை

கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டைத் தான் ஆடவில்லை என்று கூறும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் மிகவும் வணிக மயமாகி விட்டது என்றார். தி சூப்பர் ஓவர் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, “கிரிக்கெட்டை நான் மகிழ்வுடன் ஆடும் வரை இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவலுடனேயே ஆடுவேன். ஒவ்வொரு உடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் வித்தியாசமான மனிதனாகி விட்டதாகக் கருதுவேன். ஒவ்வொரு மறுவாழ்வுக்குப் பிறகு கடினமாக மாறினேன். இதன் பிறகு மீண்டும் ஆடுவேன் என்றுதான் நினைப்பேன். ஆனால் இதற்காக என்னை உந்தித் தள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாடுவோம் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் அதே வேளையில் என் கிரிக்கெட் ஆட்டத்தை நான் மகிழ்வுடன் ஆடவேண்டும். கடந்த 2 ஆண்டுகள் நான் கிரிக்கெட்டை அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆடவில்லை, எனவே அடுத்த 3-4…

Read More

காங்கிரஸில் கலகக் குரல்-குஷ்பு மீது ஜோதிமணி கடும் பாய்ச்சல்- கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது!

சென்னை: புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் காங்கிரஸில் குஷ்புவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அளப்பற்ற தியாகங்களை செய்த கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை குஷ்பு புரிந்துகொள்ளவேண்டும் என அக்கட்சியின் லோக்சபா எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, குஷ்புவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காங்கிரஸில் அதீத ஜனநாயகம் காங்கிரஸ் கட்சிக்குள் அதீத ஜனநாயகமும்,கருத்து சுதந்திரமும் உண்டு. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றுக் கருத்துக்களை கவனமாக கேட்டு,மதிக்கக்கூடியது. அதனால் தான் காந்தி குடும்பத்தின் தலைமையை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பி ஏற்கிறார்கள்.…

Read More

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா பெயர் சூட்டிய முதல்வர் பழனிச்சாமி

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்ட்ரல் மெட்ரோ நிலையம் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையைக்…

Read More

Kkssr Ramachandran MLA

மறைந்த முன்னாள் அமைச்சா் அமரா் வே.தங்கப்பாண்டியன் அவா்களுக்கு 23-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அண்ணாரது திருவுருவப் படத்திற்கு மலா் தூவி இதயஅஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More

சாதனை பெண் லலிதாம்மா

உடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.அவரைப் பார்த்ததுமே மக்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, தன் வீட்டுப்பெண் போல் நலம் விசாரிக்கிறார்.ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கவும், பெண்கள் அறியாமையிலிருந்து விடுபட்டு கல்வி பெறும் நோக்கோடும் இல்லம்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூகப் பணியாளராக லலிதா அம்மாவை, குன்றக்குடி அடிகளார் 1985-இல் ஆதீனமடம் சார்பில் நியமித்தார். அந்தப் பகுதியில் சேரிக்குச் சென்ற முதல் பிராமணப் பெண் இவர்.குழந்தைகளின் கல்விக்காக நாள்தோறும் நடையாய் நடந்து, அவர்களது பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பி, படிக்க வைக்கிறார். பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் அனைத்துத் திட்டங்களும் கிடைத்திட இணைப்புப் பாலமாகத் திகழ்கிறார். படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை, கணவரை இழந்த பெண்களுக்கு விதவை உதவித்…

Read More

பெண் சாதனையாளர் : கபடி நடுவர் சந்தியா

எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணம் தான் கபடி விளையாட்டில் நடுவராக இருக்கும் எம்.கே.சந்தியா கதிரவன்.தனது வெற்றிப் பாதையை கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.

Read More

#இருக்கன்குடி அருள்தரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்திபீடம்..

#இருக்கன்குடி அருள்தரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்திபீடம்…!!! விருதுநகர் மாவட்டம், #சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. தல வரலாறு :சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப்…

Read More